திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர், திருமலை திருப்பதி மலைப்பாதை சாலையில் சிறுத்தைகள்...
செய்திகள்
இலங்கை கல்பிட்டி கடல் பகுதியில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தி செல்வதாக இலங்கை கடற்படைக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி...
சேலத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் டூவீலர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வாலிபர் அங்கிருந்த போலீசாரிடம் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியது...
கர்நாடக மாநிலத்தில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் மூன்று தொழில் மையம் அமைக்கிறது. இது...
பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமிகளை பாதுகாப்பதே போக்சோ சட்டத்தின் நோக்கமே தவிர அவர்களுக்கு இடையேயான சம்மத காதல் உறவை...
அரசு பணியில் இருக்கும் போது ஒருவர் மரணம் அடைந்தால் அவர்களது ரத்த உறவில் உள்ள வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில்...
ஆந்திரமாநிலம், போடிமெல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் விவசாயி, 4 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். மேலும் மாடுகளை வைத்து...
இந்தியாவின் பல மாநிலங்களின் தக்காளி விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கணவன் மனைவி...
ஆளும் கட்சியின் கொடி நிறத்தில் ஒடிசா அரசு பள்ளி சீருடைகள் நிற மாற்றம் எதிர்க்கட்சிகள் கண்டனம். ஒடிசாவில் அரசு...
கர்நாடகத்தில் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் உற்சாகத்தில் உள்ளது.கடந்த 10 ஆம் தேதி கர்நாடகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் இன்று 36 மையங்களில் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. உருண்ட பெரிய தலைகள் அரசியல்.ல இதெல்லாம் சகஜம்.பா என கவுண்டமணி சொன்னதை போல கர்நாடக தேர்தலில் பல பெரிய தலைவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பிஜேபி யில் ஏறக்குறைய 14 அமைச்சர்கள், தமிழ்நாடு பிஜேபி மேலிட பார்வையாளர் சி. டி. ரவி, மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமியின் மகன் நிகில் உள்ளிட்ட பலரும் தோல்வி அடைந்துள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் 10 க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் என அனைத்து வழிகளை பயன்படுத்தியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் பிஜேபி.யினர் பீதியில் உள்ளனர். ராகுலின் நடைபயணம் வெற்றியா ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம் இந்த தேர்தலில் எதிரொலித்தது என காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கி மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. பெரும்பான்மை கிடைக்காது மற்றும் தொங்கு சட்டசபை அமையும் என பல கருத்து கணிப்புகளும் தெரிவித்தன. இருப்பினும் பெரும்பான்மையை விட 23 இடங்கள் அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் உள்ளது. யார் அடுத்த முதல்வர் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அடுத்த முதல்வர் யார் என்பதில் சரிவை சந்தித்து வருகின்றது. ஒருபுறம் முதல்வர் பதவியில் அனுபவமிக்க சித்தராமையா, மற்றொரு பக்கம் இந்த வெற்றிக்கு பல வகைகளிலும் பணத்தை செலவழித்த மாநில தலைவர் சிவக்குமார், இதில் யாரை தேர்ந்து எடுப்பது என விழி பிதுங்கி நிற்பது என்னமோ உண்மை. ஏற்கனவே ராஜஸ்தானில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வருகிறது. இதை எப்படி சமாளிக்க போகிறது என்பதை வருகின்ற நாட்களில் தெரிந்து கொள்ளலாம். தென்னிந்தியாவில் ஆட்சியை இழந்த பிஜேபி தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் மட்டும் ஆட்சி பீடத்தில் இருந்த பிஜேபி இன்று அதையும் இழந்துள்ளது.