சேலத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் டூவீலர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வாலிபர் அங்கிருந்த போலீசாரிடம் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியது பரபரப்பையும் சிரிப்பலையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் புதிய பஸ் நிலையத்திற்குள் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. எந்த நேரமும் பயணிகள் சென்றுகொண்டிருப்பதால் ஸ்டேஷன் கதவு திறந்தே இருக்கும். நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில் வாலிபர் ஒருவர் டூவீலரை போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே சென்று நிறுத்தினார்.
அவர் போதையில் இருப்பதை உணர்ந்த போலீசார் உட்கார வைத்து விசாரித்தனர் அதில் அவர் ஏற்காடு பகுதியை சேர்ந்த ராமர் என்பதும் செல்லத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வருவதும் அளவுக்கு அதிகமாக போதையில் இருந்ததும் அவர் டூவீலரை ஸ்டேஷனுக்குள்ளேயே இந்தத்தினால் தான் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்ததாகவும் சாகு தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த போலீசார் எதற்காக வண்டியை உள்ளே கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, “எனது வண்டிய பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் இதை விட்டால் உங்களுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது” எனக் கூறி அவதூறாக பேசியதாக தெரியவருகிறது.
இதை கண்ட போலீசார் அவரை விசாரித்து டூவீலர்க்கான ஆவணத்தை எடுத்து வரும்படியாக அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர், போதையில் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே சென்று பைக்கை நிறுத்திய இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சிரிப்பலையும் சிறிது நேரம் பரபரப்பையும் ஏற்படுத்தியது.