என்ன தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்தாலும், அவைகள் சாமானிய மக்களை சென்று சேருவது மிக பெரிய சவாலாக தான் இருந்து வருகிறது . ஒரு சாதாரண பெயர் மாற்றம் ஆதார் அட்டையிலோ அல்லது குடும்ப அட்டையிலோ செய்ய வார கணக்கில் அலைய வேண்டி உள்ளது, அதை அனுபவித்தவர்களுக்கு தான் அந்த வலியும், கஷ்டமும் தெரியும். அதற்காக வேலையை விட்டு, வருமானத்தை இழந்து திரிய வேண்டி உள்ளது. அதிலும் கொஞ்சம் படிப்பறிவு இல்லை என்றால் அவ்வளவு தான் பாடு திண்டாட்டம்.

இதை போன்ற மக்களுக்கு முன்னிருந்து தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்து வருகின்ற கு.இளையவன் MC, திருப்பத்தூர் மாவட்ட பொதுச் செயலாளர் (பட்டியல் அணி ), பாரதிய ஜனதா கட்சி அவரக்ளின் அடுத்த செயல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அப்படி என்ன தான் செய்துள்ளார் என்பதை விரிவாக காண்போம்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மக்களின் நீண்ட நெடிய கோரிக்கைகளான முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை பெற்று தருமாறு என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன் விளைவாக நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்துள்ள ஆயுஸ்மான் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் அவர்களுக்கு விரிவான மருத்துவ சிகிச்சைகளை அளிக்கும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டேன்.

மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் உடல் நலத்தை பேணி பாதுகாக்கும் வரையில் உடனிருந்து சேவை செய்யும் இது போன்ற மக்களுக்கான திட்டங்களை ஒவ்வொருவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அயராது பாடுபட்டு தற்போது 150-க்கும் மேலான விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியுடைய 70க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வாங்கி கொடுத்து உள்ளேன்.

மேலும் பரிசீலனில் உள்ள அனைத்து நபர்களுக்கும் அடையாள அட்டையை பெறுவதில் உறுதியாக நின்று அவர்களின் தேவையை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன் என்று உறுதி அளிக்கிறேன்.


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தாரக மந்திரத்தை நமது முன்னோர்கள் சொல்லி இருந்தாலும் , இருக்கிற கால சூழ்நிலையில் எத்தனையோ பெயர் தெரியாத தொற்று நோய்கள் வந்த வண்ணம் உள்ளன, சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் இவ்விதமான நோய்களை எதிர்கொண்டு அதற்கான மருத்துவ வசதிகளை பெற போராடும் நிலையில் இது போன்ற காப்பீடுகள் ஒரு வரமாக பார்க்கப்படுகின்றது.

அரசு கொண்டு வரும் காப்பீடுகள் எத்தனையோ ஏழை குடும்பங்களை பாதுகாத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இது போன்ற அரசு சலுகைகளை மக்களுக்கு பெற்று தருவது என் பொறுப்பு மற்றும் கடமை என்று இடைவிடாது உழைக்கும் திரு.கு.இளையவன் MC பாரதிய ஜனதா கட்சி, பெரியாங்குப்பம் ஊராட்சி அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவருடைய இந்த மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram