விளையாட்டு

பல்லேகலே: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில், இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன்...
தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். போட்டியில் இருந்து முதல் ஆளாக டெல்லி அணி வெளியேறியது. பரிதாப டெல்லி ஆரம்பத்தில் இருந்தே சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் முதல் ஆளாக வெளியேறியது டெல்லி அணி. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், சால்ட், அக்சர் பட்டேல் உள்ளிட்ட திறமையான பல வீரர்கள் இருந்ததால் சாம்பியன் பட்டம் பெறும் போட்டியில் டெல்லி அணியும் இருந்தது. பவுலிங் இல் குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்களின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே  பேட்டிங்கில் வார்னர் ரன்களை குவித்தாலும் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருந்ததால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. பின்னால் வரும் வீரர்களுக்கு போதிய பந்துகள் கிடைக்காமலும், ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்ற அவசரமும் அணியின் வெற்றிக்கு பாதகமாக அமைந்தது.  கடைசி கட்டத்தில் அக்ஷர் பட்டேல் அடித்தாலும் அது வெற்றிக்கு உதவவில்லை என்பது உண்மை. பின்னாடியே ஹைதராபாத், கொல்கத்தா டெல்லியை தொடர்ந்து பின்னாடியே ஹைதராபாத் அணியும் பிளே ஆஃப் சுற்றிற்கு செல்வது சந்தேகம் தான். அந்த அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மட்டுமே உள்ளன. மூன்றில் வெற்றி பெற்றாலும் கூட மொத்தம் 7 வெற்றிகள் தான் வரும். அதேபோல் தான் கொல்கத்தா அணிக்கும் 2 போட்டிகள் தான் உள்ளன. 5 வெற்றிகள் பெற்றுள்ள நிலையில் இனி விளையாட போகும் 2 போட்டிகளில் வென்றால் கூட 7 வெற்றிகள் தான் வரும்.  பார்க்கலாம். இன்னும் சில தினங்களில் எந்தெந்த அணிகள் உள்ளே, வெளியே என்பது தெரிந்து விடும்.
error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram