(ரஜினிகாந்த்) நடிகர் ரஜினியை பார்த்ததும் ஜெயிலர் பட வில்லன் விநாயகன் பதறிய சம்பவம் தெரியவந்திருக்கிறது 
 

மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் நடித்த மாந்த்ரீகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் விநாயகன். 1995ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் திறமையை நிரூபித்த விநாயகனுக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக மல்லுவுட்டில் முன்னணி நடிகராக உயர்ந்தார். 
 

முன்னதாக, மலையாளத்தில் தனது திறமையை நிரூபித்ததன் மூலம் ஹிந்தி மொழியிலும் அறிமுகமானார் விநாயகன். கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான அவர் அடுத்ததாக தெலுங்கு மொழியிலும் நடிக்க ஆரம்பித்தார். 2006ஆம் ஆண்டு வெளியான ஆஷத்யூடு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அங்கும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். 
 

விநாயகன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர். சமீபத்தில்கூட ஒரு பெண் பத்திரிகையாளரை அவர் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதுமட்டுமின்றி பல பெண்களுடன் அவர் உடல் ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும் அதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “எனக்கும் எனது மனைவி பபிதாவுக்கும் இருந்த அனைத்து திருமண உறவுகளும், சட்ட உறவுகளும் முடிவுக்கு வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார். 
 

மலையாளம், ஹிந்தி, தெலுங்கில் நடித்த விநாயகன் தமிழில் திமிரு படத்தின் மூலம் இண்ட்ரோ ஆனார். விஷால் நடித்த அந்தப் படத்தில் அவரது அண்ணியான ஸ்ரேயா ரெட்டிக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாற்றுத்திறனாளியாக நடித்த அவர் நடிப்பில் மட்டுமின்றி தனது வசன உச்சரிப்பின் மூலமும் கவனம் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். ஜெயிலர்: தமிழில் அவருக்கு முத்தாய்ப்பாக ஜெயிலர் படம் அமைந்திருக்கிறது. இதில் அவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். ரஜினிக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் விநாயகன். இந்தச் சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது ஷாட்டுக்கு இடையிலான பிரேக்கில் ஒரு திரை மறைவிலிருந்து சிகரெட் அடித்திருக்கிறார் விநாயகன். அந்தப் பக்கமாக ரஜினிகாந்த் எதார்த்தமாக சென்றிருக்கிறார். அதனை கவனித்த விநாயகன் உடனடியாக சிகரெட்டை தூக்கிப்போட்டுவிட்டு கொய்யா இலையை போட்டு மென்றுவிட்டு வந்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்த ரஜினிகாந்த், சிகரெட் அடிக்காதீங்க அது என்னோட பெர்சனல் அட்வைஸ். ஆனா உங்களுக்கு பிடிச்சிருந்ததுனா தாராளமா சிகரெட் அடியுங்க. 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram