ஜெயிலர் முதல் வார வசூல் நிலவரம்: வதந்திக்கு முற்றுப்புள்ளி… தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு. முதல் வார முடிவில் ஜெயிலர் திரைப்படம் படைத்த வசூல் சாதனை நிலவரம் மற்றும் முழு தகவல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உலகளவில் இப்படம் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், தமிழகத்தில் இப்படம் பெரிய அளவில் வசூல் செய்துள்ளது. முழு தகவல்கள் இதோ. 

1. ஜெயிலர் 

ஜெயிலர் – இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி & திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரையுலக பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவன சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஜெயிலர் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நிர்மல் ஆர் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஷிவ ராஜ்குமார், மோகன்லால், யோகி பாபு, மிர்னா என பல முக்கிய பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியுள்ளனர். 

2. கதை 

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தனது குடும்பத்தோடு அமைதியாக வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் போலீஸ் அதிகாரியான தனது மகனை சிலர் கடத்தியுள்ளனர் என்று அறியும் நாயகன் ரஜினி, எலி போல தனது ஓய்வு காலத்தில் வாழும் நாயகன் மீண்டும் புலியாக மாறி தனது குடும்பத்தை காப்பாற்றுவதே இந்த படத்தின் கதை. 

3. விமர்சனம் 

தலைவர் அலப்பறை – என்னும் சொல்லுக்கு உயிர் கொடுத்துள்ளார், இயக்குனர் நெல்சன் திலீப்குமார். ரசிகர்களின் கொண்டாட்டத்தில் பெரிய அளவில் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது, ஜெயிலர். வசூல் மற்றும் விமர்சனம் என ஜெயிலர் திரைப்படத்திற்கு உலகளவில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கமெர்ஷியல் திரைக்கதையில் ரஜினியின் ஸ்டைல் என இப்படத்தினை பிளாக்பஸ்டர் படமாக மாற்றியுள்ளனர், ரசிகர்கள். 

4. அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

2023 ஆகஸ்ட் 10ல் வெளியான ஜெயிலர் திரைப்படம் பட்டி தொட்டி என பல இடங்களில் வசூல் மழையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் வசூல் ரீதியாக 300 கோடி, 400 கோடி என பல தனியார் விமர்சகர்கள் இப்படத்தின் வசூல் பற்றி தகவல்கள் பரப்பி வந்துள்ள நிலையில், தற்போதும் ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கலாநிதி மாறனின் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram