

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் எப்படி இருக்கு? பிரபலங்களின் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ, இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று (10 ஆகஸ்ட் 2023)ல் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. இந்த பட்டியலில் இப்படத்தின் FDFS முடிவில் ட்விட்டர் செயலியில் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை அறிவித்து வருகின்றனர். ஜெயிலர் படம் பற்றிய தமிழ் திரையுலக முக்கிய பிரபலங்கள் மற்றும் சினியுலக சார்ந்த நிறுவனங்கள் பதிவேற்றிய ட்விட்டர் விமர்சனங்கள் இங்கு உள்ளன. முழு தகவல்கள் இதோ.
ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்த பிரபல ட்விட்டர் விமர்சகர் அமுத பாரதி இப்படத்தினை பார்த்து விட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தினை சிலாகித்து ட்வீட் பதிவேற்றியுள்ளார். இவர் இப்படத்திற்கு (3.75/5) ரேட்டிங் அளித்துள்ளார். மேலும் இப்படத்தின் நிறை குறை பற்றி பல விஷயங்கள் பேசியுள்ளார்.
பிரபல ட்விட்டர் விமர்சகர் கிறிஸ்டோபர் கனகராஜ் ஜெயிலர் திரைப்படத்தினை பார்த்துவிட்டு தனது கருத்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இப்படத்தின் இசை, இயக்கம் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பு பல பல விஷயங்களை பேசியுள்ள இவர், இப்படம் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் எப்படி இருக்கிறது என ரசிகர்களுக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட விமர்சன நிறுவனமான சவுத்வூட் சேனல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தினை பற்றி விமர்சனம் அளித்துள்ளது. இப்படம் தலைவர் ரஜினியின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என இந்த சேனல் நிறுவனம் பதிவேற்றியுள்ளது. மேலும் இப்படத்தில் பணியாற்றிய இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பிற மொழி சூப்பர்ஸ்டார் நடிகர்கள் என பலரை பாராட்டி இந்த சவுத்வூட் சேனல் ட்வீட் செய்துள்ளது.
பிரபல சினிமா விமர்சக ட்விட்டர் சேனல் மூவி கிரௌ, ஜெயிலர் திரைப்படத்தின் FDFS பார்த்துவிட்டு தனது கருத்தை பகிர்ந்துள்ளது. இதில் ஜெயிலர் படத்தினை பாட்ஷா ரீட்டர்ன்ஸ் என இரண்டு வரிகளில் புகழ்ந்து பேசியுள்ளது. மேலும் ரஜினி, விநாயகன் போன்ற நட்சத்திரங்களின் நடிப்பை பற்றி சிலாகித்து தனது கருத்தை ட்வீட் செய்துள்ளது, மூவி கிரௌ.