
கர்நாடக மாநிலத்தில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் மூன்று தொழில் மையம் அமைக்கிறது. இது தொடர்பாக மாநில தொழில் துறை அமைச்சர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின் தொழில் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது. முன்னணி தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழில் துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்
நாட்டில் தொழில் முதலீடு செய்வதில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் மாநிலத்தில் தொழில் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பாக ஆலோசிக்க டாடா டெக்னாலஜிஸ் நிறுவன தலைவர் துணை முதல்வர் நிர் வாகிகள் ஆகியோர் பெங்களூருவில் மாநில தொழில்துறை அமைச்சர் உட்பட அனைவரும் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த ஆலோசனையின் போது சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் மூன்று பொறியியல் தொழில்நுட்ப மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மையமும் அமைக்க 630 கோடி முதலீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதில் டாட்டா டெக்னாலஜீஸ் பங்களிப்பு 70 சதவீதமும் மாநில அரசின் பங்களிப்பு 30 சதவீதமாகவும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது
புதிதாக அமைக்கப்படும் மூன்று தொழில்நுட்ப மையத்தின் மூலம் அட்வான்ஸ் தொழில் முறைகள், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத்துறை போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.