அரசு பணியில் இருக்கும் போது ஒருவர் மரணம் அடைந்தால் அவர்களது ரத்த உறவில் உள்ள வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் இவ்வாறு வேலையில் சேர்பவர்கள் தாங்கள் சார்ந்த குடும்பத்தினர் அனைவரையும் பராமரிக்க வேண்டும்.
வேலையில் சேர்வதற்கு முன் இது தொடர்பாக அவர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும் ஆனால் கேரளாவில் இவ்வாறு வாரிசு நியமன அடிப்படையில் வேலையில் சேரும் பலர் அதன் பின்னர் தங்களது குடும்பத்தினரை கவனிப்பதில்லை என்று அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன
கணவன் இறந்த பின்னர் அரசு வேலையில் சேரும் மனைவி கணவனின் பெற்றோரை கவனிப்பதில்லை என்றும் தாய் அல்லது தந்தை இறந்த பின்னர் வேலை கிடைக்கும் குழந்தைகள் தங்களது பெற்றோரை கவனிப்பதில்லை என்பன உட்பட ஏராளமான புகார்கள் அரசுக்கு வந்த வண்ணமாயிருந்தன
இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது அதன்படி வாரிசு நியமன அடிப்படையில் அரசு வேலையில் சேருபவர்கள் தாங்கள் சார்ந்த குடும்பத்தினரை கவனிக்காவிட்டால் அவர்களது அடிப்படை சம்பளத்தில் இருந்து 25% தொகை பிடித்தம் செய்யப்படும்
இந்த தொகையை அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கு வழங்கப்படும் முதல்கட்டமாக இந்த உத்தரவு அரசு துறைகளில் அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது இதன் பின்னர் படிப்படியாக கேரள மின்வாரியம் போக்குவரத்து கழகம் உள்பட பொதுத்துறை நிறுவனங்களிலும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
இந்த முடிவை சமூக ஆர்வலர்கள் பலரும் பொது மக்கள் அனைவரும் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர், இந்த முடிவை கொண்டு வந்த அரசு அதிகாரிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர் எத்தனையோ மாநிலங்களில் இந்த மாதிரி பிரச்சனைகள் நடக்கும் பொழுது கேரள அரசு எடுத்துள்ள இந்த முடிவு மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது என்பதிலும் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.