
ஆளும் கட்சியின் கொடி நிறத்தில் ஒடிசா அரசு பள்ளி சீருடைகள் நிற மாற்றம் எதிர்க்கட்சிகள் கண்டனம்.
ஒடிசாவில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடை நிற மாற்றத்திற்கு காங்கிரஸ் பாஜக கண்டனம் தெரிவித்து உள்ளது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது இங்குள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாவது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது
இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரெண்டு ஜோடி இலவச சீருடைகள் ஒரு ஜோடி காலணிகள் ரெண்டு ஜோடி காலுறைகள் ஒரு டீ ஷர்ட் ஒரு ட்ராக் பேண்ட் மற்றும் ஒரு தொப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச சீருடைகள் வெள்ளை மற்றும் கரும் பச்சை நிறத்தில் இருக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது இதற்கு காங்கிரஸ் பாஜக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் இலவச சீருடைகளின் நிறம் ஆளும் கட்சியின் கொடி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது மாணவர்களையும் பெற்றோர்களையும் பாதிக்கும். அரசின் இந்த செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால் இதற்கு ஆளும் கட்சி எந்தவித பதில் அறிக்கை தெரிவிக்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது