முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அர்ச்சகர் தனக்கு உரிய மரியாதை தரவில்லை என கோரி தன்னை தாக்க முயன்றதாக ஜெ.தீபா, அவருடைய கணவர் மாதவன் மீது அர்ச்சகர் ஹரிஹரன் புகார் அளித்துள்ளார். 
 

சென்னை திநகர் அருளாம்பாள் தெருவை சேர்ந்தவர் கோயில் பூசாரி ஹரிஹரன் (42). இவர் போயஸ் தோட்டத்தில் ஜெயா டிவி கட்டடம் அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜை செய்து வருகிறார். 
 

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அவருடைய கணவர் மாதவனும் தன்னை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 

அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தினமும் இந்த பிள்ளையாருக்கு பூஜை செய்து வருகிறேன். அவரது மறைவுக்கு பிறகு சசிகலாவின் அனுமதியுடன் நான் பூஜை செய்கிறேன். போயஸ் தோட்டத்தில் பிள்ளையார் கோயில், சிவன் கோயிலிலும் பூஜை செய்கிறேன். அதற்கான செலவு மற்றும் மாத சம்பளத்தை சசிகலா கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று காலை 8.30 மணிக்கு வழக்கம் போல் நான் கோயிலில் பூஜை செய்ய சென்றேன். அப்போது போயஸ் தோட்டத்திற்கு தேசியக் கொடியேற்ற வந்த தீபாவும் அவருடைய கணவர் உள்பட 50 பேர் என்னை பூஜை செய்யவிடாமல் தடுத்தனர். 

அப்போது ஜெ.தீபா என்னிடம் வந்து உன்னை யார் பூஜை செய்ய விட்டது? என கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி என்னை தாக்கவும் செய்தார். பூஜை பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார். இதை தடுக்க வந்த காவலர் ஒருவரையும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டினர். இனி இந்த கோயிலுக்கு பூஜை செய்ய வந்தால் கொலை செய்துவிடுவோம் என தீபாவும் மாதவனும் அவர்களுடன் வந்தவர்களும் மிரட்டினர். மேலும் பிள்ளையாரின் வெள்ளி கிரீடத்தையும் பறிக்க முயன்றனர். 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram