இரண்டாம் படை வீடாம் திருச்செந்துாரில் பாதயாத்திரையின் 16வது நாளை நிறைவு செய்திருப்பது, பெருமைக்குரியது. அநீதியையும், அக்கிரமத்தையும், அடாவடியையும், அராஜகத்தையும் செய்த அசுரர்களை அடியோடு அழித்து, வெற்றி கொண்ட இந்த திருச்செந்துார் மண், நம் நோக்கத்திற்கும், பாதயாத்திரைக்கும் பலம் சேர்க்கிறது.
இரண்டாம் படை வீடாம் திருச்செந்துாரில் பாதயாத்திரையின் 16வது நாளை நிறைவு செய்திருப்பது, பெருமைக்குரியது. அநீதியையும், அக்கிரமத்தையும், அடாவடியையும், அராஜகத்தையும் செய்த அசுரர்களை அடியோடு அழித்து, வெற்றி கொண்ட இந்த திருச்செந்துார் மண், நம் நோக்கத்திற்கும், பாதயாத்திரைக்கும் பலம் சேர்க்கிறது.திருச்செந்துார் முருகன் கோவிலில், கடவுளுக்கு நேர்ந்து பசு மாடு அளிப்பர். தணிக்கை அறிக்கையில், 5,309 மாடுகளை காணவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பக்தர்கள் மாட்டைக் கொடுத்த பதிவுகள் இருக்கின்றன; ஆனால், மாடுகளை காணவில்லை.மாடுகளை திருடி, தி.மு.க.,வினருக்கு விற்று விட்டனரா? ‘கிணற்றை காணவில்லை’ என வடிவேலு கதறுவதுபோல, திருச்செந்துார் கோவிலில் மாடுகளை காணவில்லை. ஆத்துார் வெத்தலை திருச்செந்துார் அருகே உள்ள ஆத்துார், வெற்றிலை சாகுபடிக்கு பெயர் பெற்றது. அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது.இந்த வெற்றிலைக்கு கடந்த ஏப்ரலில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இது, திருச்செந்துாருக்கு கிடைத்த பெருமை.திருச்செந்துார் அமலி நகர் பகுதி மீனவர்களுக்கு துாண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு, 2022ம் ஆண்டு சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. இப்பணிகள், இதுவரை துவங்கப்படவில்லை. அறிவிப்பு வெளியாகி விட்டால், தானாகவே பாலம் வந்து விடுமா?கடந்த ஒரு வாரமாக, இந்த மீனவர்கள் போராடி வருகின்றனர். இது மட்டும் அல்ல; மீனவர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதி எதையுமே, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் வழங்குவோம் என்று சொன்னீர்களே?மீன்பிடி தடை கால நிவாரணமாக, 8,000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்னீர்களே? புதிய மீன்வள கல்லுாரிகள், மீனவர் பகுதியில் புதிய பள்ளிகள் காட்டுவோம் என்று சொன்னீர்களே; இவையெல்லாம் என்ன ஆயின? ‘பிரதம மந்திரி மத்சய சம்பதா’ திட்டம் இந்தியாவின் கடலோர மாநிலங்களில் மீன் உற்பத்திக்காக, 26,050 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது, மத்திய அரசு.
தமிழகத்துக்கு 2021 முதல் 2023 வரை, 617 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது மீனவ உள்கட்டமைப்பு நிதி மற்றும் ‘மத்சய சம்பதா’ திட்டம் இணைத்து, இதுவரை 1,356 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 457 மீனவர்கள் பயன் அடைந்துள்ளனர் தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்க, 1,464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 42,458 மீனவர்களுக்கு ‘கிசான் கடன்’ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அத்தனையும், மீனவர்கள் நலனுக்காக பிரதமர் மோடி செய்தது. மீனவர்கள் மாநாடு தமிழகத்தில் ஆட்சியில் இருப்போர், மீனவர்களுக்கு ஒரு நன்மையையும் செய்யாத கூட்டம்.