அரசு பணியில் இருக்கும் போது ஒருவர் மரணம் அடைந்தால் அவர்களது ரத்த உறவில் உள்ள வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில்...
Month: July 2023
ஆந்திரமாநிலம், போடிமெல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் விவசாயி, 4 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். மேலும் மாடுகளை வைத்து...
இந்தியாவின் பல மாநிலங்களின் தக்காளி விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கணவன் மனைவி...
ஆளும் கட்சியின் கொடி நிறத்தில் ஒடிசா அரசு பள்ளி சீருடைகள் நிற மாற்றம் எதிர்க்கட்சிகள் கண்டனம். ஒடிசாவில் அரசு...
தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். போட்டியில் இருந்து முதல் ஆளாக டெல்லி அணி வெளியேறியது. பரிதாப டெல்லி ஆரம்பத்தில் இருந்தே சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் முதல் ஆளாக வெளியேறியது டெல்லி அணி. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், சால்ட், அக்சர் பட்டேல் உள்ளிட்ட திறமையான பல வீரர்கள் இருந்ததால் சாம்பியன் பட்டம் பெறும் போட்டியில் டெல்லி அணியும் இருந்தது. பவுலிங் இல் குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்களின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே பேட்டிங்கில் வார்னர் ரன்களை குவித்தாலும் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருந்ததால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. பின்னால் வரும் வீரர்களுக்கு போதிய பந்துகள் கிடைக்காமலும், ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்ற அவசரமும் அணியின் வெற்றிக்கு பாதகமாக அமைந்தது. கடைசி கட்டத்தில் அக்ஷர் பட்டேல் அடித்தாலும் அது வெற்றிக்கு உதவவில்லை என்பது உண்மை. பின்னாடியே ஹைதராபாத், கொல்கத்தா டெல்லியை தொடர்ந்து பின்னாடியே ஹைதராபாத் அணியும் பிளே ஆஃப் சுற்றிற்கு செல்வது சந்தேகம் தான். அந்த அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மட்டுமே உள்ளன. மூன்றில் வெற்றி பெற்றாலும் கூட மொத்தம் 7 வெற்றிகள் தான் வரும். அதேபோல் தான் கொல்கத்தா அணிக்கும் 2 போட்டிகள் தான் உள்ளன. 5 வெற்றிகள் பெற்றுள்ள நிலையில் இனி விளையாட போகும் 2 போட்டிகளில் வென்றால் கூட 7 வெற்றிகள் தான் வரும். பார்க்கலாம். இன்னும் சில தினங்களில் எந்தெந்த அணிகள் உள்ளே, வெளியே என்பது தெரிந்து விடும்.
கர்நாடகத்தில் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் உற்சாகத்தில் உள்ளது.கடந்த 10 ஆம் தேதி கர்நாடகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் இன்று 36 மையங்களில் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. உருண்ட பெரிய தலைகள் அரசியல்.ல இதெல்லாம் சகஜம்.பா என கவுண்டமணி சொன்னதை போல கர்நாடக தேர்தலில் பல பெரிய தலைவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பிஜேபி யில் ஏறக்குறைய 14 அமைச்சர்கள், தமிழ்நாடு பிஜேபி மேலிட பார்வையாளர் சி. டி. ரவி, மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமியின் மகன் நிகில் உள்ளிட்ட பலரும் தோல்வி அடைந்துள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் 10 க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் என அனைத்து வழிகளை பயன்படுத்தியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் பிஜேபி.யினர் பீதியில் உள்ளனர். ராகுலின் நடைபயணம் வெற்றியா ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம் இந்த தேர்தலில் எதிரொலித்தது என காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கி மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. பெரும்பான்மை கிடைக்காது மற்றும் தொங்கு சட்டசபை அமையும் என பல கருத்து கணிப்புகளும் தெரிவித்தன. இருப்பினும் பெரும்பான்மையை விட 23 இடங்கள் அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் உள்ளது. யார் அடுத்த முதல்வர் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அடுத்த முதல்வர் யார் என்பதில் சரிவை சந்தித்து வருகின்றது. ஒருபுறம் முதல்வர் பதவியில் அனுபவமிக்க சித்தராமையா, மற்றொரு பக்கம் இந்த வெற்றிக்கு பல வகைகளிலும் பணத்தை செலவழித்த மாநில தலைவர் சிவக்குமார், இதில் யாரை தேர்ந்து எடுப்பது என விழி பிதுங்கி நிற்பது என்னமோ உண்மை. ஏற்கனவே ராஜஸ்தானில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வருகிறது. இதை எப்படி சமாளிக்க போகிறது என்பதை வருகின்ற நாட்களில் தெரிந்து கொள்ளலாம். தென்னிந்தியாவில் ஆட்சியை இழந்த பிஜேபி தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் மட்டும் ஆட்சி பீடத்தில் இருந்த பிஜேபி இன்று அதையும் இழந்துள்ளது.
டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னரை விட மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அதிகாரம் என நேற்று உச்சநீதி...
வந்தே பாரத் ரயில் சேவை என்பது இந்திய நகரங்களுக்கு இடையே உள்ள அதிகமான இடைவெளியை குறைத்து அதிவேகமாக செல்லக்கூடிய பணி...
இந்த நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் வங்கி கணக்கு வைத்து, அதனை முறையாக பராமரிக்கிறீர்கள். தொலைவில் இருப்பவர்களுக்கு பணத்தை அனுப்பவும்,...
பொதுவாகவே இளசுங்களை தன் பக்கம் இழுத்து அவர்கள் மத்தியில் பேசுபொருளாக இருப்பவர் வெங்கட்பிரபு.. ஸ்டார் ஹோட்டல் சப்ளையர் மாதிரி யார், யாருக்கு என்ன வேணுமோ அதை அன்லிமிடெட்.ஆக பரிமாறுவதில் பி.ஹெச்.டி… வாங்கியவர் வெங்கட். தனது முதல் படமான *சென்னை 600028*.இல் அதுவரை கிரிக்கெட்.டை பற்றி யாரும் சொல்லாத கோணத்தில் காதல், நட்பு என இளநெஞ்சங்களை கட்டிப்போட்டு இருந்தார். அடுத்து தல அஜித்தின் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர் போல *மங்காத்தா*.வில் பொளந்து கட்டினார். நெகடிவ் ரோலில் வாலி. க்கு பிறகு அழுத்தமான ரோலில் அஜித்தை பட்டய கிளப்ப வைத்தார். ஆம்பூர் *பிரியாணி* யை *சரோஜா* கையால் *கோவா* வில் சாப்பிட்டு விட்டு *மன்மதலீலை* யை தொடங்குவது போல பல நேர்த்தியான படங்களை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படமாக்கி இருந்தார். சிம்புவுக்கு சினிமா மார்க்கெட் தொலைந்து போன சமயத்தில் *மாநாடு* போட்டு அவரை மீண்டும் வெற்றி சிம்மாசனத்தில் அமர வைத்தார்.. சின்ன குழந்தை முதல் இப்ப வரை கையை ஆட்டி, காலை தூக்கி பல இம்சைகள் செய்தாலும் பெரிய வெற்றியை சுவைக்காமல் இருந்த சிம்பு வெங்கட் பிரபு.வால் மீண்டும் கல்லா கட்ட துவங்கி உள்ளார். காப்பாத்துமா கஸ்டடி தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.வை மே மாதம் 12 ஆம் தேதி *கஷ்டடி* யில் எடுத்து மீண்டும் களமாட காத்து இருக்கிறார் வெங்கட். தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் கொடி நாட்டிய ஆள் தற்போது *கார தேசமான ஆந்திர பிரதேசத்தில்* காலடி எடுத்து வைக்க இருக்கிறார். ஆனால் இந்த படத்தில் ஒரு திருஷ்டி பூசணிக்காய் ஒன்று உள்ளது. அது இவரின் ராசிக்கு வெற்றியை தேடி தரும். அந்த திருஷ்டி வேறொன்றுமில்லை பிரேம்ஜி தான்.