பெங்களூரு மாநகர போலீசார் கடந்த 6 மாதங்களில் பறி முதல் செய்த 138 கோடி மதிப்பிலான 750 கிலோ போதை பொருட்களை அழித்தனர்.

கடந்தாண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடந்த பல்வேறு சோதனைகளில் கிட்டத்தட்ட 140 கோடிக்கும் அதிகமான பல தரப்பட்ட போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்து அசத்தியுள்ளனர்.
முதலமைச்சர் சித்தராமையாவின் உஹட்ராவின் பெயரில் தனிப்படை அமைத்து செய்த தேடுதல் வேட்டையில், யாருமே எதிர்பார்க்காத அளவில் போதை பொருட்கள் புழக்கத்தில் இருப்பதும், அவற்றை பறிமுதலும் செய்துள்ளனர் பெங்களூரு தனிப்படை போலீசார்.

நீதிமன்ற உத்தரவின் பெயரில், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை தாபஸ்பேட்டை தொழிற் பேட்டையில் வைத்து எரித்து அழித்தனர் . இதன் மதிப்பு 140 கோடிக்கும் அதிகம் என்று செய்தி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுமக்களின் கேள்வி என்னவெனில், அப்போ இதுவரை பிடிபடாத போதை பொருட்கள் எங்கு தான் சென்றன? அதனால் எவ்வளவு மக்கள் சீரழிந்திருப்பார்கள் என்பதோடு மட்டும் அல்லாமல், இனி தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடவேண்டும் என்பதுவே!