மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக பலி – சட்டவிரோதமாக வயலில் போடப்பட்ட மின்வேலி
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பேகூர் அருகே ஓம்காரம் மண்டலத்தில் உள்ளது ஒரு கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சிவராஜ். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வன விலங்குகளில் இருந்து பயிர்களை காப்பதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை வயலுக்குள் நுழைய முயன்ற பொழுது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது.
ஏறக்குறைய 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானை மின்சாரம் இருப்பதை அறியாமல் மயில்க்குள் நுழைய முயன்ற பொழுது இந்த பரிதாபகரமான செயல் நடந்தேறியது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர், இது தொடர்பாக வனத்துறையினர் வயலின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அநியாயமாக மின்சாரம் தாக்கி இறந்தது அந்த யானை குறித்தான தகவல் அந்த கிராமத்தில் மிகுந்த சலசலப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உணவு தேடி மட்டுமே மன விலங்குகள் ஊருக்குள் இறங்கி வருவதை வழக்கமாகக்கொண்டிருக்கும், ஒன்றும் அறியாத அந்த வன விலங்குகளை இது போன்று மின்சாரம் வைத்துக்கொள்வது ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. வன விலங்குகளால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் மக்கள் அதை வனவிலங்கு அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்குரிய நடவடிக்கையை சட்டப்படி எடுக்க வேண்டுமே தவிர இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வன விலங்குகள் அழிவதற்கு காரணமாக இருப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலாகும்.