மனித வாழ்க்கையில் எதிர்நோக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது அந்த தீர்வை கண்டுபிடிக்கும் மனம் இருந்தால் போதும் என்பதற்கு கிராமப்புற மாணவர்களின் சாதனை உதாரணமாக இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டம் கித்தூர் சென்னம்மா தாலுக்கா கிராமத்தில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுதீப்,சுனில்,மகேஷ்வாடி,நவீன் மற்றும் பிரேம் ஆகிய மாணவர்கள் தங்கள் கிராமத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்வதால் படிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கென்ன தீர்வு காண்பது என்று யோசித்தனர். மின் நிறுத்தம் ஏற்பட்டாலும் படிப்பு பாதிக்காமல் இருக்கும் மின்சார வசதி ஏற்படுத்துவது என்று பல வழிகளை சிந்தித்தனர். அவர்கள் சிந்தனையில் பேனாக்களை தயாரிக்கும் சிந்தனை தோன்றி யது. எழுதும் பேனாக்களில் லைட் உருவாக்கலாம் என்று தீர்மானித்தவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றனர்.
இரவில் மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேனாக்களை சார்ஜ் செய்வது மூலம் படிப்பது பள்ளி ஆசிரியர்கள் கொடுக்கும் ஹோம்வொர்க் ஆகியோர் சிறப்பாக செய்து முடிக்கிறார்கள். பேனாக்களை தயாரிக்க 2 எல்இடி லைட்கள், வயர், ரெஜிஸ்டர், 3D பாக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்துள்ளனர்
ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் பயன்படுத்தும் வகையில் இந்த பெண் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமையை பார்த்து வியந்த உள்ள எஜுகேஷன் இந்தியா நிறுவன மேலாளர் காசிநாத் புதிய ஸ்டார்ட்அப் மற்றும் ஆராய்ச்சிகளின் இளைய சமூகம் ஈடுபட வேண்டியது அவசியம் அந்த முயற்சி மேற்கொண்டுள்ள ஆறு கிராமப்புற மாணவர்களின் திறமையை ஒவ்வொருவரும் கௌரவிக்க வேண்டும் மாணவர்களை ஊக்கப்படுத்த எங்கள் நிறுவனம் சார்பில் 10,000 பேனாக்களை தயாரித்து கொடுக்கும் ஆர்டர் மகளிடம் கொடுத்துள்ளது அதற்காக 20,00,000 வழங்கியுள்ளோம் மாணவர்கள் தயாரித்து கொடுக்கும் பெண் லைட்டுகளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்