ஆந்திரமாநிலம், போடிமெல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் விவசாயி, 4 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். மேலும் மாடுகளை வைத்து பால் வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இவருக்கு கடந்த சில வாரங்களில் மட்டும் பல லட்சங்கள் வருமானம் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் அந்த சோக சம்பவம் நிகழ்துள்ளது, கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல மாட்டுகளை கவனித்து விட்டு பாலை கடைகள் மற்றும் வீடுகளுக்கு விற்பனை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை கடந்து வரும்போது அங்கே ஒளிந்துகொண்டிருந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். என்ன நடக்கிறதென்று அவர் சுதாரிக்கும் முன்பே அந்த மர்ம ஆசாமிகள் ராஜசேகரை தாக்கி அவரது கை கால்களை கட்டி சரமாரியாக அடித்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் ராஜசேகர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் இரவு முழுவதும் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையில் தகவல் தெரிவித்துள்ளனர். விடிந்த பிறகு அவரது சடலத்தை கைப்பற்றிய காவல் துறை, சடலத்தின் அருகே தக்காளி விற்ற 30 லட்சம் ரூபாய்க்கான ரசீது இருப்பது கண்டுபிடிக்க பட்டது. ராஜசேகர் தக்காளி விற்று பெரும் தொகையை கொண்டு வருவது தெரிந்துகொண்ட யாரோ ஒரு சில நபர்கள் திட்டமிட்டு அந்த பணத்திர்காக ராஜசேகரை கொலை செய்திருக்க கூடும் என்ற கண்ணோட்டத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தக்காளியின் விலையேற்றதால் நாடு முழுவதும் பல்வேறு விதமான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க, கை, கால்கள் கட்டப்பட்டு ஒருவர் கொலைசெய்ய பட்டிருப்பது மிகவும் அதிரிச்சியும் வேதனையும் அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்