தென்னிந்திய மில்கள் சங்க தலைவர் ரவி ஷாம் பொது செயலாளர் செல்வராஜ் அகில இந்திய ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் ஜவுளித்தொழில் அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மட்டுமே 40% ஜவுளி தொழில்கள் உள்ளன, பாரம்பரியமான இந்த ஜவுளி தொழில் தற்போது படுவேகமாக சரிவு நிலையை சந்தித்து வருகிறது. டெக்ஸ்டைல் மில்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருள் பஞ்சு, இதன் விலை அபரிவிதமாக அதிகரித்து உள்ளது, சர்வதேச அளவில் ஒப்பிடும் போது இந்திய பங்கு விலை ரெண்டாயிரம் ரூபாய் அதிகமாக உள்ளது.
உள்நாட்டில் போதிய அளவில் உற்பத்தி இல்லாத காரணத்தாலும் தரம் குறைவாக இருப்பதாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர். இப்படி இறக்குமதி செய்து தயாரிக்கும் நூல்களை விற்க முடியாமல் தேக்க நிலை ஏற் பட் டுள் ளது இது பஞ்சாலைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பருத்தி விளைக்கும் நூல் விலைக்கும் சம்பந்தமில்லாமல் உள்ளது இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள தொடர் நலிவு காரணமாக பல பஞ்சாலைகள் அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் பஞ்சு மீதான 11 % வரி இந்த தொழிலுக்கு பெரும் நெருக்கடியும் தாக்கத்தையும் கொடுக்கிறது.
ஜவுளி ஏற்றுமதியும் பெருமளவு சரிந்துவிட்டது முன்பெல்லாம் 1000 கண்டெய்னர்களில் ஜவுளி ஏற்றுமதி நடக்கும் ஆனால் தற்போது 200 கண்டெய்னர்கள் கூட செல்வதில்லை ஒட்டுமொத்த இந்திய அளவில் ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு மட்டும் இருபத்தி மூணு பர்சென்ட் குறைந்துள்ளது.
இந்த சூழ் நிலையில் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம் என்ற நிலையில் பல மில்கள் இயங்கி வருகின்றன ஜவுளி தொழில் சீர் அடைய வேண்டுமென்றால் மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் பலமுறை நாங்கள் மத்திய அரசிடம் கோரிக்கையும் இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் கடிதம் எழுதியுள்ளோம் மாநில அரசும் மின் கண்டு மின் கட்டணத்தில் சில சலுகைகளுடன் அறிவித்தால் இன் தொழில் மீண்டும் வளர்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர்கள் கூறினர்.
மத்திய அரசு மாநில அரசு எந்த அரசாக இருந்தாலும் ஒரு சட்டத்தை அமல்படுத்தும் போது அது பொது மக்களுக்கும் சமுதாயத்திற்கும் வளர்ச்சி ஏற்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது, தொழில்கள் நலிவடையும் வேலையில் அரசு சார்ந்த அதிகாரிகள் அமல்படுத்தப்பட்ட வரி விகிதத்தை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்