இலங்கை கல்பிட்டி கடல் பகுதியில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தி செல்வதாக இலங்கை கடற்படைக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு வந்து பணியில் அந்த நாட்டு கடற்படையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற பிளாஸ்டிக் படகை மடக்கி சோதனை செய்ததில் நாயகன் படத்தில் வருவதைப்போல அடிப்பகுதியில் மறைத்து வைத்திருந்த எட்டு கிலோ 49 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து படகில் இருந்த ஃப் மண்டலகுடா பகுதியை சேர்ந்த ரெண்டு பேரையும் கைதுசெய்து சுங்க துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தின் எந்த பகுதிக்கு கடத்தப்பட்ட தங்கம் போய் சேர விழுந்தது என்ற நோக்கத்தில் கைதுசெய்து பட்டவர்கள் இடத்தில் விசாரணை நடத்தி வருவதாக பத்திரிகையாளர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீப காலங்களில் திரைப்படத்தில் வருவதைப் போன்ற கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களைப் பார்ப்பது பொழுது போக்குக்காக மட்டுமே, அதில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்தில் அதிகம் இருக்க வேண்டும், ஆனால் அதைத்தவிர படத்தில் காட்டப்படும் கடத்தல் கொலை கொள்ளை போன்றவற்றை அப்படியே செய்யும் சில கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.
சினிமா உலகம் என்பது வேறு, நிஜ உலகம் என்பது வேறு என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் வரையில் இது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.