சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் வெளியானது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி அரை 302 ல் கடவுள் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் , புலி , கசட தபற, உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிம்புதேவன்.
தற்போது இவர் யோகிபாபு ஹீரோவாக வைத்து நெய்தல் பின்னணியில் ஆன திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் இதற்கிடையே சிம்புதேவன் யோகிபாபு கூட்டணியிலான புதிய படத்தின் தலைப்பு சமீபத்தில் வெளியானது இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இதனை வெளியிட்டனர் படத்திற்கு BOAT என பெயர் வைத்துள்ளனர், சப் டைட்டிலாக நெய்தல் கதை எனவும் வைக்கப்பட்டுள்ளது.
முழுக்கவும் நடுக் கடலில் தயாராகும் திரைப்படம் எனவும் இதில் படகு போட்டியாக யோகிபாபு நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது.
தனது எதார்த்தமான நடிப்பால் திறமையாலும் மக்களை மகிழ்விப்பவர் யோகி பாபு அவருடைய நடிப்பை கோலமாவு கோகிலா படத்தில் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது அதற்காக அவர் பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் சிம்புதேவனுடன் அவர் இணைய போகும் கூட்டணி மிகவும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சிம்புதேவன் ஏற்கனவே பல காமெடி படங்களை பல லெஜெண்டுகளை வைத்து இயக்கியவர், இப்போது யோகிபாபுவை வைத்து ஒரு புது ஜானர்ல் படத்தை எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.