பாலி வடக்கன் எனும் மலையாள இயக்குநர், கடந்த டிசம்பர் 2-ம் தேதி பிரபல தனியார் மால் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரிடம் 20 ரூபாய் பார்க்கிங் கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். ஆனால், இதற்கு பாலி மறுத்துள்ளார். பின்னர் அவர் வெளியே செல்லாதபடி கதவை மூடியுள்ளனர் அங்கிருந்த காவலர்கள். இதையடுத்து 20 டிசம்பர், 2021 அன்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் பாலி.

அவர் தொடர்ந்த வழக்கில், “மால்களில் உள்ள பார்க்கிங் பகுதி என்பது அங்கு வரும் பார்வையாளர்களுக்காக இருக்கும் ஒரு பொதுவான இடம். அதற்கென தனியாகப் பணம் வாங்கக் கூடாது. அப்படிப் பணம் வசூலிக்கலாம் என்று எந்தவொரு சட்டமோ விதிகளோ இல்லை. அப்படிக் குறிப்பிட்ட தனியார் மால் நிர்வாகம் பணம் வாங்குவது சட்டவிரோதமானது” என அவரின் வழக்கறிஞர் ஜோஸ் குறிப்பிட்டு வாதிட்டார்.

இதித் தொடர்ந்து டிசம்பர் 21, 2021 அன்று நீதிபதி நாகரேஷ் தலைமையிலான அமர்வு கேரள மாநில அரசு, கலமசேரி முனிசிப்பாலிட்டி, தனியார் மால் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதன் பொருட்டு ஆஜரான வழக்கறிஞர் ஶ்ரீகுமார், கேரள முனிசிப்பாலிட்டி சட்டத்தின் 447 பிரிவின் கீழ் தனியார் மால் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பின்னர் 14 ஜனவரி, 2022 அன்று மீண்டும் இது விசாரணைக்கு வந்தது. இம்முறை நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் (P.V.Kunhikrishnan) விசாரணை நடத்தினார். அவர் தனது உத்தரவில், “இந்த வழக்கில் கலமசேரி முனிசிப்பாலிட்டியின் நிலை என்பது உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் தெளிவான விளக்கம் மற்றும் நிலைப்பாட்டை இரண்டு வாரங்களில் (28.01.2022) தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram