பற்றி எரியும் மணிப்பூர் விவகாரத்தால் முதல் நாளிலேயே முடங்கியது நாடாளுமன்றம் பிரதமர் விளக்கம் தரக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது இரு அவைகளிலும் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் 227 இன் கீழ் அலுவல்களை ஒத்திவைத்து மணிப்பூர் நிலவரம் தொடர்பாக விவாதம் நடத்த நோட்டீஸ் கொடுத்திருந்தன. இந்நிலையில் மக்களவை காலையில் கூடியதும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும் விவாதம் முடிந்ததும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவான பதில் அளிப்பார் என்றும் அதற்கான நேரத்தை சபாநாயகர் முடிவு செய்வார் என்றும் கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரத்தால் குறுகிய கால விவாதத்திற்கு நோட்டீஸ் களை ஏற் றவை தலைவர் தொடங்க அனுமதித்தார் இதற்கு ஆட்சேபனை தெரிவித்த காங்கிரஸின் மல்லிகார்ஜுனா கார்கே விதி இரண்டு தேர்வுத் தேடியின் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து முழு விவாதம் நடத்த வலியுறுத்தினார்.
இதற்கு அவைத்தலைவர் சம்மதிக்காததால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட மாநிலங்களவையிலும் எந்த அலுவலும் நடக்காமல் முதல் நாளிலேயே இரு அவைகளும் முடங்கின
மணிப்பூர் வீடியோ தேசத்தின் அவமானம்:
மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு நேற்று காலை வந்த பிரதமர் மோடி, அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மணிப்பூர் பழங்குடியின பெண்களை நிர்வாண ஊர்வலம் நடத்தி சென்ற வீடியோ குறித்து மிகுந்த வேதனை தெரிவித்தார். அவர் கூறுகையில் ஜனநாயக கோயிலில் நிற்கும் இந்த சமுதாயத்தில்
என் இதயம் வலியாலும் கோபத்தாலும் நிறைந்துள்ளது எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். மணிப்பூர் மக்களுக்கு நடந்த கொடுமையை ஒருபோதும் மன்னிக்க முடியாது
இந்த சம்பவம் 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்தி உள்ளது என்றார்.
சோனியா வலியுறுத்தல்: காலை அவை கூடுவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார், அப்போது அங்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை சந்தித்த பிரதமர் மோடி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அதற்கு சோனியா நலமுடன் இருப்பதாக பதில் அளித்தார். இந்த சந்திப்பின் போது சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என மோடியிடம் வலியுறுத்தியதாக காங்கிரஸ் மக்களவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.