

பெரிய எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் படம் வருவதால் அவரது ரசிகர்கள் இதனை ஒரு திருவிழா போலவே கொண்டாட ஆரம்பித்திருக்கின்றனர். கட் அவுட்டுகள், பேனர்கள் என திரையரங்குகள் கலைகட்டியிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு சிறிய ஏமாற்றமாக இருப்பது அதிகாலை காட்சி இல்லாததுதான்.
அதேசமயம் வெளிநாடுகளில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. எனவே உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் அதிக ஆர்வத்துடன் அதிகாலை காட்சிக்கு சென்றனர். திரையரங்குகளில் இருக்கும் புகைப்படங்களையும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து தங்களது விமர்சனத்தையும் ட்வீட் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.
அதன்படி படமானது தங்களுக்கு முழு திருப்தியை கொடுத்திருப்பதாகவும்; முழுக்க முழுக்க ரஜினி படத்தில் மாஸ் செய்திருக்கிறார்; யோகிபாபு – ரஜினியின் காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என பெரும்பாலானோர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்துவிட்டார். பீஸ்ட்டால் ரோஸ்ட் செய்தவர்களுக்கு பதிலடி அளித்திருக்கிறார் எனவும் கூறுகின்றனர்