ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் திரு.இளையவன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு இப்போதிருக்கும் சூழ்நிலையில், பிஜேபி-யிலான தலைமை எல்லா பிரச்சனைகளையும் மிக விரைவில் சரி செய்யும் எனவும், தன்னால் கண்டிப்பாக மக்களுக்காக நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
கடந்த இரண்டு வருட காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாதனூர் ஒன்றிய செயலாளர் பதவியில் வகித்து வந்த இவர், கொள்கை மற்றும் கட்சி ரீதியாக தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க கட்சிப் பணி மற்றும் மக்கள் பணியை சிறப்பாக செய்து வந்தார்.
மேலும் கட்சிக்காக பல இடங்களில் கொடியேற்றி, அன்னதானம், மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகம் போன்றவற்றை அன்பளிப்பாக கொடுத்து வந்துள்ளார். பெரியங்குப்பம் ஊராட்சி பகுதிகளில் நிர்வாக சீர்கேடு மற்றும் ரயில்வே பாலம் அருகில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் ஆகியவற்றை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தி, மேலும் இந்த நிகழ்வுகளை சமூக ஊடகங்களிலும் எடுத்துக் கூறி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவந்துள்ளார்.
BJP-யில் இணைந்தார்
இந்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தமிழக மாநில தலைவர் திரு.அண்ணாமலை ஆகியோரின் சொற்பொழிவுகளையும் கட்சிப் பணிகளையும் தேசிய நலனில் கொண்டுள்ள அக்கறையும் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் இதன் மூலமாக தானும் தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்று எண்ணி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட தலைவர் மற்றும் OBC பிரிவு மாவட்ட தலைவர் மற்றும் மாதனூர் ஒன்றிய செயலாளர் மற்றும் மாதனூர் ஒன்றிய தலைவர் திரு.சரவணன் மற்றும் திரு.ஜவகர் OBC பிரிவு செயலாளர், திரு.ஆறுமுகம் மாவட்ட செயலாளர் ஆகியோரின் தலைமையில் கட்சி அலுவலகத்தில் பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார்.
என்னுடைய இந்த முடிவை ஏற்று பட்டியல் சமூகம் பிரிவில் மாவட்ட பொதுச் செயலாளராக அறிவித்த பட்டியல் சமூகத் தலைவர் ஏ.கோவிந்தராஜ் அவர்களுக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இது என்னோடு மட்டும் நின்றுவிடாமல், என்னைச் சார்ந்தவர்களையும் பட்டியலினப் பிரிவில் உள்ள அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கையை வலுப்படுத்துவேன், மேலும் கொள்கை ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் நமது கட்சியின் அனைத்து நன்மைகளையும் மக்களை சென்றடையும் வகையில் முழு உழைப்போடு செயல்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன், இன்றைய தினத்தில் எனக்கு பதவி வழங்கி என்னை கௌரவித்த அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும் என்னோடு தோள் கொடுத்து நிற்கும் எனது அன்பு பாஜக தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – இவ்வாறு தெரிவித்தார்.