சமீப காலங்களாக வரும் திரைப்படங்களில் Cococola கம்பெனிகாரன் ஒரு நாளைக்கு 1,00,000 லிட்டர் தண்ணீர் எடுக்குறான்னு சொல்றதும் , ஹூண்டாய் கார் கம்பெனி காரன் ஒரு நாளைக்கு 1,00,00,000 லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கிறான் என்று வசனம் பேசுறதும் அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட வசனங்களை திரைப்படங்களில் பேசுகிறதினால் கொக்கோ கோலா கம்பெனியையோ, ஹூண்டாய் கம்பெனியையோ இழுத்து மூடி விடவா போகிறது இந்த அரசாங்கம். ஆனால் அப்படிப்பட்ட வசனங்களை வைப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. பொதுமக்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் , இயற்கை வளங்கள் எப்படி கொள்ளை போகிறது என்பதை பற்றி அறிந்திருக்க வேண்டும். எதிர்காலங்களில் வரும் சந்ததியினர் இது குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்கிற நோக்கத்துக்காகவே இது போன்ற வசனங்கள் திரைப்படங்களில் வைக்கப்படுகிறது.
அதைப் போலத்தான் நம்முடைய சுற்று சூழலில், நம்மை சுற்றி இருக்கிற பல ஊர்களில் நடக்கிற ஒரு சாதாரண பிரச்சனை குப்பைகளை தெருவோரங்களிலோ அல்லது ஒரு ஏரியாவை சுற்றிலோ, அல்லது ஒரு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திலோ கொட்டுவது.
ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாதவரையில் அது ஒரு பெரிய பிரச்சினையாக விஸ்வரூபமெடுப்பதில்லை, அதுவே அனுதினமும் மக்கள் பயணிக்கும் சாலையில் குப்பைகளை கொட்டி வைக்கும் பொழுது அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.
அப்படிப்பட்ட ஒரு பிரச்சனையை எடுத்து தைரியமாக எடுத்து பேசி, ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அதில் வெற்றியும் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் இளையவன் MC அவர்களுடைய அரசியல் பயணத்தை தான் விரிவாக பார்க்க போகிறோம்.
கவுன்சிலராக பதிவேற்றுக்கொண்ட கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு நல திட்டங்களை தனது வார்டு மக்களுக்காக பெற்று தந்திருக்கிறார்.
நாம் அன்றாடம் கடந்து செல்லும் சாதாரண பிரச்சனையான தெரு விளக்கு சரி செய்வதிலிருந்து, தெருக்களை சுத்தம் செய்து அகல படுத்துவதும், எரியாமல் கவனிப்பாரற்று கிடக்கும் தெருவிளக்கை சரிசெய்வதும், குடிநீர் வசதி இல்லாத தெருக்களுக்கு குடிநீர் வசதி செய்து தருவதும், வீடு வசதி இல்லாத ஏழை மக்களுக்கு அரசாங்க உதவி பெற்று வீடுகள் கட்டி கொடுப்பதும் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சியில் கடந்த 14.09. 22 அன்று தலைவர் தொல் திருமாவளவன் M P அவர்களின் ஆணைக்கிணங்க நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பெரியாங்குப்பம் ஊராட்சியில் இருக்கும் ரயில்வே பாலத்தின் அருகே உள்ள கழிவுகளை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரயில்வே மேம்பாலத்தின் அருகில் தேங்கிக் கிடக்கும் மழை நீரையும் மலை போல் தேங்கி இருக்கும் குப்பைகளை ஊராட்சி சார்பாகவும் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாகவும் சுமார் ஆறு மாத காலமாகியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தேங்கி கிடக்கும் மழை நீரையும் குப்பைகளையும் அகற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் கு.இளையவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரை மேற்கு மாவட்ட செயலாளர் S.சந்திரன் பேசுகையில் துர்நாற்றம் வீசும் குப்பைகளையும் தேங்கி கிடக்கும் மழை நீரையும் அகற்ற நடவடிக்கை எடுக்காத ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை கண்டித்தும், இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக குப்பைகள் அகற்ற வேண்டும் இல்லையென்றால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுக்கையிடும் போராட்டம் நடைபெறும் என்று கண்டன உரையாற்றினார். இதில் தொகுதி செயலாளர்கள் வெங்கடேசன், நகர பொருளாளர் பாஸ்கர். கிருத்துவ பேரவை செயலாளர் அறிவானந்தம், சி.கதிரவன் கிளைச் செயலாளர், கே. முருகன் கிளை துணைச்செயலாளர் கோ. இளங்கோவன் கிளை பொருளாளர், ஆர் கோவிந்தராஜ் துணை கிளை செயலாளர் கோ.பரத் குமார் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி:
முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று, அதிகாரிகள் மற்றும் தலைவர், துணைத்தலைவர் இடத்தை பார்வையிட்டு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது. எத்தனையோ தலைவர்களும், அதிகாரிகளும் இதற்கு முன்பிருந்தவர்களும் கவனிக்காமல் விட்ட இந்த விஷயத்தின் முக்கியத்தை உணர்ந்து, முனைப்புடன் செயல்பட்ட வி.சி.க. மாதனூர் ஒன்றிய செயலாளர் (கிழக்கு) இளையவன் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் மக்கள் தங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொணடனர்.