சென்னையில் முட்டுக்காடு படகு இல்லத்தில் தற்போது மிதக்கும் உணவகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் எப்போது உணவகம் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மிதக்கும் உணவகம்:

தமிழகத்தின் தலைநகர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுகாட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பாக படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லத்தில் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மிதவைப்படகு, இயந்திர படகு சவாரி செய்யப்படுகிறது. இங்கு கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் 2000 க்கும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இனி அனைத்து வார இறுதி நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயங்கும் – தமிழக போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!

இந்த நிலையில் பயணிகளுக்கு மேலும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் 5 கோடி மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்கப்பட உள்ளது. இந்த உணவகம் 125 அடி நீளமும் 25 அடி அகலத்திலும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த உணவகம் மேல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே உணவை உண்ணக் கூடிய வகையில் தயார் செய்யப்படும் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மிதக்கும் கப்பல் உணவகத்தில் தமிழக உணவுகள் மட்டும் அல்ல சர்வதேச அளவிலான உணவுகளும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும். பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையும் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram