
பொதுவாகவே இளசுங்களை தன் பக்கம் இழுத்து அவர்கள் மத்தியில் பேசுபொருளாக இருப்பவர் வெங்கட்பிரபு.. ஸ்டார் ஹோட்டல் சப்ளையர் மாதிரி யார், யாருக்கு என்ன வேணுமோ அதை அன்லிமிடெட்.ஆக பரிமாறுவதில் பி.ஹெச்.டி… வாங்கியவர் வெங்கட். தனது முதல் படமான *சென்னை 600028*.இல் அதுவரை கிரிக்கெட்.டை பற்றி யாரும் சொல்லாத கோணத்தில் காதல், நட்பு என இளநெஞ்சங்களை கட்டிப்போட்டு இருந்தார். அடுத்து தல அஜித்தின் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர் போல *மங்காத்தா*.வில் பொளந்து கட்டினார். நெகடிவ் ரோலில் வாலி. க்கு பிறகு அழுத்தமான ரோலில் அஜித்தை பட்டய கிளப்ப வைத்தார். ஆம்பூர் *பிரியாணி* யை *சரோஜா* கையால் *கோவா* வில் சாப்பிட்டு விட்டு *மன்மதலீலை* யை தொடங்குவது போல பல நேர்த்தியான படங்களை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படமாக்கி இருந்தார். சிம்புவுக்கு சினிமா மார்க்கெட் தொலைந்து போன சமயத்தில் *மாநாடு* போட்டு அவரை மீண்டும் வெற்றி சிம்மாசனத்தில் அமர வைத்தார்.. சின்ன குழந்தை முதல் இப்ப வரை கையை ஆட்டி, காலை தூக்கி பல இம்சைகள் செய்தாலும் பெரிய வெற்றியை சுவைக்காமல் இருந்த சிம்பு வெங்கட் பிரபு.வால் மீண்டும் கல்லா கட்ட துவங்கி உள்ளார்.
காப்பாத்துமா கஸ்டடி
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.வை மே மாதம் 12 ஆம் தேதி *கஷ்டடி* யில் எடுத்து மீண்டும் களமாட காத்து இருக்கிறார் வெங்கட். தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் கொடி நாட்டிய ஆள் தற்போது *கார தேசமான ஆந்திர பிரதேசத்தில்* காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.
ஆனால் இந்த படத்தில் ஒரு திருஷ்டி பூசணிக்காய் ஒன்று உள்ளது. அது இவரின் ராசிக்கு வெற்றியை தேடி தரும். அந்த திருஷ்டி வேறொன்றுமில்லை பிரேம்ஜி தான்.