நெல்லை-நாகர்கோவில் நான்கு வழி சாலையில் ஒரு பயோ டாய்லெட் அமைக்க நிதி ஒதுக்கி இத்தோடு மூன்று ஆண்டுகளாகியும் இடம் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கலெக்டர் டோஸ் விட்டார்.
நெல்லை மாவட்டம் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் எம்பின் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் நான்கு வழி சாலையில் காவல்கிணறு முக்கிய சந்திப்பாகும், இந்த பகுதியில் தொழிலாளர்கள் பொதுமக்கள் நலன் கருதி ஒரு பயோ டாய்லெட் அமைக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கப் பட்டது
ஆனால் இன்னும் பயோ டாய்லட் அமைக்கப்படவில்லை என்று எம்பி குற்றம்சாட்டினார், அதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரி இடம் தேடிக் கொண்டிருப்பதாக பதிலளித்தார். இதனால் டென்ஷனான கலெக்டர் கார்த்திகேயன் “ஒரு டாய்லட் அதுவும் ஒரு பயோ டாய்லெட் அமைக்க நிதி ஒதுக்கும் மூன்று ஆண்டுகள் ஆன பிறகு இடம் தேர்வு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற உங்கள் பதில் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு சென்று பாருங்கள் அவர்கள் எப்படி பயோ டாய்லட் திட்டத்தை செயல்படுத்துகிறார் என்று கற்றுக்கொள்ளுங்கள், உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்றங்கள் ஒரு வாரத்திற்குள் நீங்கள் முடிக்க வேண்டும் , எனமிகவும் கடிந்து கொண்டார்”.
மூன்று வருடத்திற்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்த இடம் தேடிக்கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை கண்டித்த கலெக்டர், பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கொண்டுவரப்படும் எந்த திட்டத்தையும் அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்படுத்த வேண்டும், பொதுமக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில்தான் நம்மைப் போன்ற அதிகாரிகள் சம்பளம் வாங்குகின்றோம் என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்று கலெக்டர் தெரிவித்தார்.