விபச்சார வழக்கில் 3000 லஞ்சம் திருச்சி பெண் எஸ் ஐ அதிரடி கைது. மாதம் 10,00,000 வரை கல்லா கட்டியது அம்பலம், பைக்கில் வைத்திருந்த 5,40,000 சிக்கியது.

விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தர பேரம் பேசி 3000 லஞ்சம் வாங்கிய பெண் எஸ் ஐ கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரத் அவரது மனைவி அஜிதா, இருவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருகின்றனர்.

இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்தனர், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தர ரமா 10,000 லஞ்சம் கேட்டுள்ளார் இதற்கு அஜிதா தன்னால் 10,000 தர முடியாது என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து எஸ் ஐ ரமா அட்வான்ஸாக 3000 கொடுத்தால் உனக்கு சாதகமாக வழக்கை முடித்து தர முடியும் என்று கூறியிருக்கிறார். இது பற்றி அஜிதா திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனைப்படி நேற்று காலை ரசாயனம் தடவிய 3000 நோட்டுகளை SI அம்மாவிடம் அஜிதா கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்ஐயை கைது செய்தனர் அவரது மொபட்டில் வைத்திருந்த 5.40,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்தனர் .

கைதான ரமா விபச்சார பிரச்சார தடுப்பு பிரிவில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வந்தார். திருச்சி மாநகரை பொறுத்தவரை 60 மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது, ஒரு சென்டருக்கு மாதம் 10,000 – 20,000 ரமா அவரது வங்கி கணக்கில் கூகுள் பே மூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது 10,000 என்று கணக்கிட்டாலே 60 மசாஜ் சென்டர்களுக்கு கிட்டத்தட்ட மாதம் ₹6,00,000 வருகிறது. இதில் சில மசாஜ் சென்டர்களுக்கு பத்தாயிரத்திற்கு மேல் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது அதன்படி மாதம் ₹10,00,000  வரை லஞ்சமாக பெற்று இருக்கலாம் என்று கூறுகிறார்கள்

இந்த மொத்த வசூல் பணமும் இவருக்கு மட்டும் சென்றதா அல்லது உடன் பணியாற்றும் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் சென்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளது கடந்த நாடு வருடங்களாக எஸ் ஐ ரமா விபச்சார தடுப்பு பிரிவில் இருந்து உள்ளதால் கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram