அரசியல் ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல, மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று முடிவெடுத்து வந்தாலும் அரசியலில் இருக்கும் சிக்கல்கள் ஏராளம்.

ஒரு சாமானியன் தன்னுடைய அரசாங்க சம்பந்தப்பட்ட வேலையை செய்து முடிகிறதுக்குள்ள எத்தனை பேருக்கு எவ்வளவு லஞ்சம் குடுக்க வேண்டி இருக்குனு எத்தனையோ படத்துல நாம பார்த்திருப்போம், இந்த பிரச்சனையெல்லாம் மக்களாகிய நமக்கு மட்டும் இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட பிரதிநிகளுக்கும் தான்.

ஒரு சிறிய சம்பவம், சாதாரண விஷயம் என்று நாம் நினைப்பது வரலாற்றையே புரட்டி போடும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது, மகாத்மா காந்திஜி அவர்களை ஒருவேளை அந்த ரயில் டிக்கெட் சோதனை செய்பவர் கீழே தள்ளி விடாமல் இருந்திருந்தால் சுதந்திர போராட்டத்திற்கு அது வித்திட்டிருக்காது. ஒரு வேளை அப்துல் கலாம் அவர்கள் பறவை எப்படி பறக்கிறது என்று யோசிக்காமல் இருந்திருந்தால் அவர் இவ்வளவு பெரிய விஞ்ஞானியாக வந்திருக்க முடியாது. காமராஜரிடம் பள்ளிக்கூடத்திற்கு பசங்கள அனுப்பிட்டு அதுங்க வயிறு எப்படி நிறையும் – அப்படினு ஒரு மாடு மேய்கிறவர் கேட்காமல் விட்டிருந்தால் ஒருவேளை நாமெல்லாம் படிக்காமலே போயிருப்போம்.

இதெல்லாம் ஒரு சிறிய சம்பவம் போல தெரிந்தாலும், சரித்திரத்தையே புரட்டிப்போடும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறது. அதுபோல தான் நம்முடைய சமூகத்திலும் சிறிய விஷயம் , சாதாரண விஷயம் என்று நாம் யோசிக்கும் எத்தனையோ விஷயம் அதை சார்ந்தவர்களுக்கு அடிப்படை தேவையாக கூட இருக்கலாம்.

தண்ணீர், ஆம் தண்ணீர் தட்டுப்பாடு. மக்கள் வாழ தேவையான அடிப்படை வசதிகளில் தண்ணீர் தான் முதல் இடத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட அடிப்படை தேவையை பூர்த்தி செய்து மக்களிடத்தில் நல்ல அபிமானத்தை பெற்றிருக்கும் ஒரு சம்பவத்தையும், அதை செய்து முடித்த கவுன்சிலர் திரு கு. இளையவன் MC, அவர்களை பற்றித்தான் இந்த செய்தி துணுக்கு.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பல வருடங்களாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆட்சி மாற்றங்கள், அரசாங்க பிரச்சனைகள் போன்ற சில காரணங்களால் தள்ளி போய்க்கொண்டே இருந்து வந்துள்ளது.

இந்த பிரச்னையை கேள்விப்பட்ட தேசிய கட்சி கவுன்சிலரும், மக்கள் ஆதரவாளருமான கு.இளையவன் MC அவர்கள் இந்த குறிப்பிட்ட பிரச்னையை தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று அதன் முக்கியத்துவத்தையும் இன்றியமையாமையையும், புதிதாக ஒரு தண்ணீர் tank அமைத்து தர வேண்டும் என்றும் வலியுறித்தினார். அவர் கோரிக்கை மனுவினை ஏற்று உடனடியாக புதியதாக சின்டெக்ஸ் டேங்க் ( நீர் தொட்டி ) வைத்துக் கொடுக்க தேவையான ஏற்பாடுகளை தலைவர் அவர்கள் செய்து கொடுத்துள்ளார், அங்கு புதிதாக ஒரு தண்ணீர் tank உடனடியாக வைக்கப்பட்டு மக்கள் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நமது நிருபர்களிடம் பேசிய அவர்
தன்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றி கொடுத்ததற்காக தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு எம்ஜிஆர் நகர் முதல் தெரு மக்களின் சார்பாக மணமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – இவ்வாறு கூறினார்.

பாதிப்பிற்குள்ளாகிய மக்கள், பல காலமாக கிடப்பில் போடப்பட்ட இந்த கோரிக்கை திரு.கு. இளையவன் MC , அவர்களால் மிக விரைவிலேயே சரி செய்யப்பட்டதை கண்டு மகிழ்ச்சியுற்று, தங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்பதை தெரிவித்து கொண்டனர். உங்களுடைய இந்த மக்கள் பணி தொடர தமிழ்நாடு டுடே பத்திரிகை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram