டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னரை விட மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அதிகாரம் என நேற்று உச்சநீதி மன்றம் அறிவித்த நிலையில் அதன் பிரதிபலிப்பு புதுச்சேரி.யில் துவங்கி உள்ளது.
கிரண்பேடி – நாராயணசாமி ஃபைட்
புதுச்சேரி.இல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்த போது மத்திய அரசின் சார்பில் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே கவர்னருக்கும், முதல்வராக இருந்த நாராயணசாமிக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
மாநில அரசின் சார்பில் எத்தனை சட்டங்கள் இயற்றினாளும் அதனை கிடப்பில் போட்டு வந்தார். இன்னும் சொல்லப்போனால் கிரண்பேடி நிழல் முதல்வராகவே செயல்பட்டு வந்தார். அவரை மத்திய அரசு தன் கைப்பாவையாக வைத்து மாநிலத்தின் நலனை கெடுப்பதாக நாராயணசாமி புலம்பி வந்தார். இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி, ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆளுநருக்கு சாதகமாகவே தீர்ப்பளித்தது. ஆளுநர் நிர்வாகத்தில் தலையிடலாம் என கூறிய நீதிபதிகள் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்தது.
டெல்லி விசயத்தில் திருப்பம்
நேற்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், துணை நிலை ஆளுநர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் எனவும், அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு இப்போது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் சந்தோசமாக அமைந்துள்ளது. ஏனென்றால் பிஜேபி ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து அரசியல் செய்வதாக புலம்பி வந்த நிலையில், இந்த தீர்ப்பு அத்தகைய மாநில முதல்வர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.