எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நோ பால் என்றும் ஒரு முறை போட்டால் பரவாயில்லை, திரும்ப திரும்ப நோ பால் போடுகிறீர்களே என பிரதமர் மோடி கிண்டல் செய்து நாடாளுமன்றத்தில் பேசினார்.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தி வருகின்றன.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பிரதமர் அவையில் இல்லை. அதனால் ராகுல் காந்தி பேசாமல் அவரது கட்சியை சேர்ந்த வேறு ஒரு எம்பி கவுரவ் கோகாய் பேசினார். இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் ராகுல் காந்தி பாயிண்ட் பாயிண்டாக கேள்விகளை எழுப்பினார்.
மணிப்பூருக்கு பிரதமர் போகாதது ஏன், மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டார்கள். பாரதமாதாவையே பாஜக அரசு படுகொலை செய்துவிட்டது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆவேசமாக பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது திமுக எம்பி கனிமொழி பேசினார். அவரும் மணிப்பூருக்கு பிரதமர் சென்று அங்கு அந்த மக்களுக்கு நம்பிக்கையை தர வேண்டும் என்றார். இந்த நிலையில் நேற்றைய தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய போது மணிப்பூர் விவகாரத்தை அரசியல் செய்து குடிமக்களுக்கு மத்திய அரசை தவறாக சித்தரிக்கிறார்கள் என்றார்.
மேலும் பிரதமர் மோடி நாளை பேசுவார். அது மிக சிறப்பான பதிலடியாக இருக்கும் என்றார். இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றத் தொடங்கினார். அவர் பேசுகையில் கடவுளுக்கு மிகவும் கருணை இருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் பேசிவிடுகிறார்.