
சினிமா பாணியில் லஞ்சம் வாங்கிய அதிகாரியை 15 கிலோ மீட்டர் விரட்டி பிடித்த லோக் ஆயுக்தா போலீசார்
உணவு பொருட்கள் உற்பத்தி உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வாங்கிய அதிகாரியை போலீசார் 15 கிலோ மீட்டர் விரட்டிப்பிடித்து கைது செய்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூருவில் உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமம் புதுப்பிப்பதற்காக அதன் கூர்மையாளர் மாநில உணவு அதிகாரி வர்களை சந்தித்து விண்ணப்பம் கொடுத்துள்ளார். உரிமம் புதுப்பிக்க ₹1,00,000 கொடுக்கும்படி மாநில அதிகாரி கேட்டதாக தெரிகிறது, அட்வான்ஸ் தொகையாக ₹10,000 கொடுத்து அதன் மீதி தொகையை ஜூலை பதினாலாம் தேதி இரவு கொடுப்பதாக தெரிவித்தார்
அதை ஏற்று குறிப்பிட்ட இடத்தில் பணம் கொண்டு வந்து கொடுக்கும்படி உணவு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தார். இதனிடையில் உணவு அதிகாரி லஞ்சம் கேட்கும் தகவலை ரங்கதாம்நய்யா பெங்களூரு போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் கொடுத்த வழிகாட்டுதல்படி நேற்று முன்தினம் இரவு பணம் எடுத்துச் சென்றார்.
சினிமா பாணியில் sketch: பெங்களூரு போலீஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி நேற்று முன்தினம் இரவு பணம் எடுத்துச் சென்று உணவு விடுதி ஒனர் மாநில உணவு கட்டுப்பாட்டு அதிகாரியிடம் 43,000 ரொக்கத்தை கொடுத்தார், மறைந்திருந்த பெங்களூர் போலீசார் உணவு கட்டுப்பாட்டு அதிகாரியை வளைத்துப் பிடித்தனர். இந்த சம்பவத்தின் போது காரில் இருந்து தப்பியோட முயற்சித்தம் உணவு கட்டுப்பாட்டு அதிகாரியை ஏறக்குறைய 15 கிலோ மீட்டர் தூரம் அவரை விடாமல் விரட்டி போலீசார் கைது செய்தனர்.
சினிமா பாணியில் நடந்த இந்த கைது பெங்களூரு வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, நேர்மையாக செயல்படும் எத்தனையோ அதிகாரிகள் இருக்கும் இந்த உணவு கட்டுப்பாட்டு வாரியத்தில் இவரை போன்ற சிலரால் ஒட்டுமொத்த துறைக்கும் களங்கம் ஏற் பட் டுள் ளது என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவர் மீது அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்த விளைவித்து வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக காவல் நிலையத்தில் தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது