ஃப்ரான்ஸ்ல் இருந்து அபுதாபி பயணம், பிரதமர் மோடி அதிபர் ஷேக் முகம்மது பேச்சுவார்த்தையில் உடன்பாடு, ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்திய ரூபாயில் வர்த்தகம்

பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப் பயணமாக பிரான்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முன்னதாக பிரான்ஸ் சென்ற அவர் அங்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார்.

அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது சிறப்பான முறையில் வரவேற்றார் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் மோடி ஐந்தாவது முறையாகப் பயணம் மேற்கொண்டால் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் உடனான இந்த சந்திப்பில் திரிசக்தி, உணவு பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு ஆகிய துறைகளின் கீழ் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு நாடுகளுக்கும் இந்திய ரூபாய் மற்றும் UAE நாணயம் அடிப்படையிலான வர்த்தகம் நடத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில் “இரு நாடுகளின் நாணயங்களின் அடிப்படையில் வர்த்தகம் நடத்தும் ஒப்பந்தம் மேலும் முதலில் முதலீடுகளை அதிகரிக்கும், அதிபர் ஷேக் முகமதுவிடம் இருந்து நான் எப்போதும் ஒரு சகோதரனின் அன்பைப் பெற்றிருக்கிறேன். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் உங்களை உண்மையான நண்பராக பார்க்கின்றார்கள்” என்று கூறி பெருமிதம் அடைந்தார்.

அபுதாபியில் டெல்லி ஐ ஐ டி வளாகம்: ஒன்றிய கல்வி அமைச்சகம் மற்றும் அபுதாபியின் கல்வி மற்றும் அறிவு துறை ஆகியவற்றுடன் இணைந்து டெல்லி ஐ ஐ டி வளாகத்தை அபுதாபியில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. கடந்த வாரம் தான்சானியாவில் சென்னை ஐ ஐ டி வளாகம் அமைப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது அபுதாபியில் டெல்லி ஐ ஐ டி வளாகம் அமைக்க பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் டெல்லி ஐ ஐ டி யின் அபுதாபி வளாகத்தில் முதுகலை படிப்புகள் வழங்கப்படும், இளங்களை பட்டப் படிப்புகள் 2024 செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்

நாடு திரும்பினார்: ஐக்கிய அரபு எமிரேட் பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி இந்தியா நாடு திரும்பினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் இல் “ஒரு பயனுள்ள ஐக்கிய அரபு எமிரேட் பயணத்தை நிறைவு செய்கிறோம் நம் அது உலகை மேம்படுத்தும் நோக்கத்தில் பல விஷயங்களில் நமக்கு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி” என்று அதில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram