தமிழ் சினிமாவை பொறுத்தவரை முஸ்லீம்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட படங்கள் வருவது மிகவும் அபூர்வம். இந்து மற்றும் கிறிஸ்தவ நட்பு, குடும்பங்கள் குறித்த படங்கள் அதிகமாக வந்துள்ளன. முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், தான் பட்ட கஷ்டம் தன் குழந்தைகள் பட கூடாது என்பதற்காக வேலைக்கு செல்கிறாள். அங்கு அவள் சந்திக்கும் பிரச்சினைகள், சிக்கல்கள் என்ன என்பதையும் அதிலிருந்து அவள் மீண்டாளா என்பதையும் அழகான திரைக்கதை மூலம் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறியிருக்கிறார்.

அப்படி என்ன தான் கதை?

சென்னை திருவல்லிக்கேணியில் கணவர் ஜித்தன் ரமேஷ்,  மூன்று குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சூழ கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்கிறார். அது ஒரு கால் சென்டர். கூடுதல் சம்பளம், இன்க்ரிமென்ட் கிடைக்கும் என்பதற்காக பிரண்ட் ஷிப் சாட் என்ற பிரிவுக்குச் செல்கிறார். அங்கு வரும்  டெலிபோன் கால் கள் அனைத்துமே ஆபாசமானவைதான். தங்கள் அடையாளத்தைச் சொல்லாமல் பணி செய்பவர்கள் வரும் போன்கால்களில் பேசவேண்டும். இப்படியெல்லாம் கூட  கால் சென்டர்  இருக்கிறதா?.

ஒரு வாரம் அதில் வேலை பார்க்கலாம் இல்லையென்றால் மாறிக்கொள்ளலாம் என நினைத்து செல்கிறார். அப்படி வரும் ஒரு காலில் ஒருவரிடம் பேசி வருகிறார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் யார் என்பதை தெரிந்து கொண்டு, அந்த நபர் ஐஸ்வர்யா ராஜேஷை மிரட்ட ஆரம்பிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை.

எந்த மதப் பெண்களாக இருந்தாலும் பல பெண்கள் அவர்களது விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாத ஒரு கட்டமைப்புதான் நம்மிடம் உள்ளது. தங்கள் கனவுகளை, ஆசைகளை, லட்சியங்களைத் துறந்து ஏதோ ஒரு சூழலில் அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தள்ளப்படுகிறார்கள். அப்படியான ஒரு கதாபாத்திரமாகத்தான்  பர்ஹானா கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்படிப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சினைகளைச் சமாளிக்க வேலைக்கு வந்தால் அங்கு சில விஷமிகளால் எவ்வளவு தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை இப்படம் பதிவு செய்துள்ளது.

நெகடிவ் கருத்தும்சில நெருடல்களும்

சென்னையை பொறுத்தவரை பலதரப்பட்ட வேலைகள் இருக்கும்போது ஒரு குடும்பப்பெண் இவ்வாறு கால் செண்டரில் ஆபாசமாக பேசும் ஒரு  பணிக்கு செல்வாளா என்பதே சின்ன நெருடல். அதுவே இந்த கதாபாத்திரத்தின் மேல் ஒரு பரிதாபம் வருவதற்கு பதிலாக முரண்பாடு தான் தோன்றுகிறது. இதுவரை நடித்திராத, மனைவிக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். மிகவும் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஐஸ்வர்யாவின் தோழிகளாக அனுமோள் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் பெண்கள் தடம் மாறினால் எப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதை ஐஸ்வர்யா தத்தா கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram