குலத்தொழிலை ஒன்றிய அரசு ஊக்குவிப்பதாக முரசொலி நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.பிரதமர் மோடி அறிவித்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் உள்ளடக்கம்வே சனாதனம் தான் என்றும் தந்தை தொழிலை மகன் தொடர வேண்டும் என்பதே சனாதனம் என்றும் முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முரசொலி தலையங்கத்தில் வெளியான கட்டுரை: 

சனா­த­னம் என்­றால் என்ன என்று பரப்­புரை செய்ய ஒன்­றிய அமைச்­சர்­­களுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார் பிர­த­மர் மோடி. அவர் அறி­வித்­துள்ள ‘விஸ்­வ­கர்மா யோஜனா’ திட்­டத்­தின் உள்­ள­டக்­கமே சனா­த­னம்­தான். தந்தை தொழிலை மகன் தொடர வேண்­டும் என்­பதே சனா­த­னம். குலத் தொழிலை எவ­ரும் மாற்­றிக் கொள்­ளக் கூடாது என்­ப­து­தான் சனா­த­னம். அதற்­கா­கவே ஒரு திட்­டம் போடு­கி­றார் பிர­த­மர். 

ஆகஸ்ட் 15 அன்று கொடி­யேற்­றி­விட்டு பிர­த­மர் பேசும் போது குலத்­தொ­ழி ­லைச் செய்­ப­வர்­கள் தங்­க­ளது குடும்­பத் தொழி­லைத் தொடர்ந்து செய்­தால் நிதி கொடுப்­போம் என்று அறி­வித்­தார். இரா­ஜாஜி கொண்டு வந்த குலக்­கல்­வித் திட்­டத்­தின் மறு­ப­திப்­பு­தான் இது. 

விஸ்­வ­கர்மா யோஜனா -– என்ற திட்­டம் 18 வகை­யான ஜாதி­களை அடை­யா­ளம் காட்­டு­கி­றது. அவர்­க­ளது பரம்­ப­ரைத் தொழி­லுக்கு ஊக்­கம் அளிப்­ப­தன் மூல­மாக குலத் தொழிலை ஊக்­கு­விக்­கி­றது. பரம்­ப­ரை­யாக தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு கட­னு­தவி வழங்­கும் திட்­டம் இது. 

பரம்­ப­ரைத் தொழில்­க­ளைச் செய்­ப­வர்­கள் என்­றால் அனைத்­துத் தொழில்­­ களை­யும் சொல்­லா­மல் 18 தொழில்­கள் மட்­டும் என வரை­ய­றுத்­தது ஏன்? 

இந்­தத் திட்­டத்­தில் சேர்­ப­வர்­கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக அந்­தத் தொழிலை செய்­ப­வர்­க­ளாக இருக்க வேண்­டும். செருப்பு தைப்­ப­வர் பரம்­பரை பரம்­ப­ரையாக இந்­தத் தொழிலை செய்து வரு­கி­றேன் என சான்­றி­தழ் வாங்கி வர வேண்­டும். இந்­தத் தொழி­லாளி ஒரு­வர் தனது தொழிலை விரி­வுப்­ப­டுத்தி, வேறு ஒரு பொருளை தயா­ரித்­தால் அவ­ருக்கு நிதி உதவி கிடை­யாது. பி.எம்.விஸ்­வ­கர்மா என்ற திட்­டத்தை 16.8.2023 அன்று அமைச்­ச­ர­வை­யின் பொரு­ளா­தா­ரக் குழு ஏற்று 13 ஆயி­ரம் கோடி பணத்­தை­யும் ஒதுக்கி இருக்­கி­றது. 2023 முதல் 2028 முதல் குலத் தொழில் செய்ய வாரி­சு­க­ளுக்கு அவர்­க­ளது குடும்­பத்­தி­னர் கற்­றுக் கொடுப்­பார்­க­ளாம். 

பதி­னெட்டு பரம்­ப­ரைத் தொழில்­கள் இதில் இணைக்­கப்­பட்­டுள்­ளது. 

1. தச்­சர், 2. படகு தயா­ரிப்­பா­ளர், 3. கவ­சம் தயா­ரிப்­ப­வர் 

4. கொல்­லர், 5. சுத்­தி­யல் மற்­றும் கரு­வி­கள் தயா­ரிப்­ப­வர் 

6. பூட்டு தயா­ரிப்­ப­வர், 7. பொற்­கொல்­லர், 8. குய­வர் 

9. சிற்பி, 10.காலணி தயா­ரிப்­ப­வர், 11. கொத்­த­னார் 

12. கூடை, பாய், துடைப்­பம் தயா­ரிப்­ப­வர் 

13. பொம்மை தயா­ரிப்­ப­வர், 14. முடி திருத்­து­ப­வர் 

15. பூமாலை தொடுப்­ப­வர், 16. சல­வைத் தொழி­லா­ளர் 

17. தைய­லர், 18. மீன்­பிடி வலை தயா­ரிப்­ப­வர் 

இதனை செய்­யப் பழ­கு­வோ­ருக்கு ஒரு லட்­சம் முதல் 2 லட்­சம் வரை மானி­யத்­தில் கடன் கிடைக்­கும். 

தச்­சன் மகன் தச்­சுத் தொழி­லைத்­தான் செய்ய வேண்­டும்– – சல­வைத் தொழி­லாளி மகன் சல­வைத் தொழி­லைத்­தான் செய்ய வேண்­டும் – முடிதி­ருத்­ தும் தொழி­லாளி மகன் வாழ்க்கை முழுக்க முடி­வெட்­டத்­தான் வேண்­டும் –- என்­பதை ஊக்­கு­விக்­கி­றார் பிர­த­மர். அதற்­குத்­தான் இந்­தத் திட்­டம். அவ­ர­வர்க்கு விதிக்­கப்­பட்ட தொழிலை மட்­டுமே அவ­ர­வர் செய்ய வேண்­டும் என்­ப­து­தான் மனு­வின் கட்­டளை. அது­தான் சனா­தன தர்­மம். அதை மீறக் கூடாது என்­ப­தற்­கா­கவே இப்­படி ஒரு திட்­டத்தை கொண்டு வரு­கி­றார் பிர­த­மர். 

அனைத்­துக் கட்­சி­க­ளை­யும் கூட்டி ஆலோ­ச­னைக் கூட்­டம் நடத்தி இத­னைக்கண்­டித்து தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னார் திரா­வி­டர் கழ­கத் தலை­வர் மான­மிகு ஆசி­ரி­யர் கி.வீர­மணி அவர்­கள். இக்­கூட்­டத்­தின் முடி­வுப்­படி மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் சென்­னை­யில் நடந்­துள்­ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram