Assistant Manager, Technical Supervisor ஆகிய பணிகளுக்கு என தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Centre for Excellence in Postal Technology-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 38 காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அரசு, தேர்வு செய்யும் முறை deputation ஆக இருக்குமெனவும் , தகுதி உள்ள நபர்கள் இதை தவறாது பயன்படுத்தி கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளது.
- Assistant Manager – 25 பணியிடங்கள்
- Technical Supervisor – 13 பணியிடங்கள்
பணிக்கான கல்வி விவரம்:
இப்பணிக்கு அரசு /அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணிக்கான அனுபவ விவரம்:
இந்த CEPT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
பணிக்கான வயது விவரம்:
Assistant Manager / Technical Supervisor பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:
பணியின் போது Pay Matrix Level – 6 / 7 என்ற ஊதிய அளவுகளின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு செய்யும் முறை:
பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
Assistant Manager / Technical Supervisor பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://ccc.cept.gov.in/technicalposts என்ற இணையதள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 12.11.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
நிறுவனம் | Ministry of Communication (CEPT) |
காலி பணியிடங்கள் | 38 |
பணியின் பெயர் | Technical Supervisor, Assistant Manager |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Online application link | https://ccc.cept.gov.in/technicalposts/Register.aspx |