கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னடம் தெரியாது என்பது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று கிண்டலாக குமாரசாமி சாடியுள்ளார்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பிரசாரம் செய்த முன்னாள் முதல்வர் குமாரசாமி மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக மகளிர் வளர்ச்சி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் திட்டம் , விவசாயிகளின் வளர்ச்சி, தொழில்முறை வளர்ச்சி போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட திட்டங்களை செயல்படுத்துவது தான் தனது லட்சியம் என்று பிரசாரம் செய்தார். இவற்றையெல்லாம் செயல்படுத்த வேண்டும் ஆனால் மக்கள் ஜாதா கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு தந்து வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்த முடியாவிட்டால் கட்சியை கலைப்பேன் என்று ஹெச்டி சிவகுமார் வாக்குறுதி அளித்தார்.

123 தொகுதிகளில் ஜெயிக்காதமா ஜனதா கட்சியை குமாரசாமி இன்னும் களைக்கவில்லை என்று முதல்வர் சித்தராமையா குமாரசாமியை சீண்டினார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஹெச்டி குமாரசாமி,

நான் 123 தொகுதிகளில் ஜெயிக்கவில்லை என்றால் கட்சியை கலைக்கறேன் என்று சொல்லவில்லை, மா ஜனதா கட்சி ஆட்சி அமைத்து பின்பு இந்த திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றால் கட்சியை கலைக்கறேன் என்று தான் சொன்னேன்

சித்தராமையா கன்னட அறிஞர் என்று நினைத்தேன் ஆனால் அவருக்கு கன்னடம் சரியாக தெரியாது என்பது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று கிண்டலடித்தார்

42 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக அறிந்தேன் இது குறித்தெல்லாம் கவலைப்படாத முதல்வர் சித்தராமையாவும் காங்கிரஸ் கட்சியும் எதிர்கட்சிகள் கூட்டத்தை நடத்துவதில் சித்தராமையா ஆர்வம் காட்டி வருகிறார்

ம.ஜ. தவிற்கு என்று சித்தாந்தமும் கொள்கையும் கிடையாது அது ஒரு சந்தர்ப்பவாத கட்சி அதிகாரத்திற்காக குமாரசாமி யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேர்வார் என்று அமைச்சர் தினேஷ் விமர்சித்திருந்த நிலையில், தினேஷ் பேச்சை கேட்டு எங்கள் கட்சி நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை நாங்கள் காங்கிரசின் அடிமைகள் இல்லை என்று குமாரசாமி பதிலடி கொடுத்தார்.

லஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்: ஹெச்டி குமாரசாமி கூறுகையில் காங்கிரஸ் ஆட்சியில் பணியிட மாற்றங்களுக்கு பணம் பெற்றது தொடர்பான ஆவணங்களை நான் சட்டப்பேரவையில் வெளியிட்டால் எனது ஆட்சியில் இதுபோன்ற பணியிட மாற்றங்களுக்கு பணம் பெறப்பட்டு இருக்குமாயின் அதற்கான ஆவணங்களை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் வெளியிடுவார்களா? எனக்கு எதிரான ஆதாரங்களை காட்டி நிரூபித்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். பாஜகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை அடைய முயற்சிப்பதாக கூறப்படுவது குறித்து பேசிய குமாரசாமி பாரதிய ஜனதா தான் அதிகமான எம்எல்ஏக்களை பெற்றுள்ளது எதிர்க்கட்சி தலைவரை விரைவில் பாரதிய ஜனதா நியமிக்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஒன்றிய அமைச்சராகும் எண்ணமோ அல்லது எதிர்க்கட்சி தலைவராகம் எண்ணமும் எனக்கு கிடையாது என்று குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram