இந்தியாவில் பிரபலமானவர்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வக்கீல்கள் கொண்ட குழு ஆய்வு செய்துள்ளது. இதில் இந்தியாவின் கோடீசுவர என்ற பட்டியலில் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் இடம் பிடித்துள்ளார் நாடு முழுவதும் 28 மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்எல்ஏக்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது. மொத்தம் 4001 எம் எல் ஏக்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இதில் நாட்டின் பணக்கார எம்எல்ஏக்களாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடக எம் எல் ஏ க்கள் இடம் பிடித்துள்ளனர்.

கர்நாடக எம் எல் ஏக்களில் 16% பேர் 100 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளவர்கள் இந்தியாவின் கோடீஸ்வர எம் எல் ஏ க்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம் எல் ஏ வும் துணை முதல்வருமான டி கே சிவகுமார் முதலிடம் பிடித்துள்ளார் இவரது சொத்து மதிப்பு 1413 கோடி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது டி கே சிவகுமார் தேர்தல் ஆணையத்தில் அளித்த தகவல்படி அவரிடம் 273 கோடி அசையா சொத்துக்களும் 1140 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக கூறியிருந்தார். 2-வது இடத்தில் கர்நாடக சுயேச்சை எம் எல் ஏவும் தொழிலதிபருமான பூட்டஸ்வாமி கவுடா உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1767 கோடி, 5,00,00,000 மட்டுமே கடன் உள்ளதாக இவர் தெரிவித்துள்ளார். மூன்றாவது இடத்தை இளம் எம்எல்ஏவான காங்கிரசை சேர்ந்த பிரியா கிருஷ்ணா பிடித்துள்ளார் 39 வயதே ஆன இவர் சொத்து மதிப்பு 1156 கோடி இவர் நாடு முழுவதும் உள்ள எம் எல் ஏ க்களின் 881 கோடிக்கு கடன் உள்ளவர்கள் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

இவரது தந்தை பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு 4-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 68,00,00,000. கர்நாடகாவின் மற்றொரு எம்எல்ஏ ஜனார்த்தன ரெட்டி கோடீஸ்வரர்கள் பட்டியலில் 23-வது இடத்தில் உள்ளார். மொத்த எம்எல்ஏக்களில் 32 பேர் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் மிகவும் குறைந்த சொத்துக்களைக் கொண்ட எம் எல் ஏக்கள் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் சிந்து தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நிர்மல்குமார் தாரா இடம் பெற்றுள்ளார் இவரது சொத்துக்கள் வெறும் ₹1700 தான்.

இவருக்கு அடுத்த இடத்தை ஒடிசாவை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ மகன் தான் முதலி பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 15,000 மட்டுமே மேலும் 18,370 சொத்துக்களை கொண்ட பஞ்சாபின் நரேந்தர் பால் 3வது இடத்திலும் 24000 ரூபாய் மதிப்பு சொத்துக்களுடன் பஞ்சாப்பை சேர்ந்த கெர்பர் ராஜ் 4வது இடத்திலும் ₹30,000 சொத்து மதிப்புடன் ஜார்க்கண்ட் மெங்கள் களிந்தியும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram