1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விலாவாரியாக அப்போதைய அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த இன்றைய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விவரித்துள்ளார். 
 

இது தொடர்பாக திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: 1989-ம் ஆண்டு ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் நடந்தது. அப்போது, தற்போதைய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியலுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் அரசியலில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. சட்டசபையில் காங்கிரஸ் தலைவராக மூப்பனாரும் துணைத் தலைவராக தமிழிசையின் தந்தை இருந்தார். அவருக்கு வேண்டுமானால் தமிழிசை உதவியாக இருந்திருக்கலாம். 
 
1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அவருக்கு ஏதோ நடக்கப் போகிறது என்கிற தகவல் முன்கூட்டியே கிடைத்திருக்கலாம். அதனால் வழக்கமாக படிப்பதைப் போல இல்லாமல் டேபிள் மீது சிறிய ஸ்டூல் போட்டு அதன் மீது பட்ஜெட் காபியை வைத்து படித்தார் கருணாநிதி. 
 

முன்னதாக 26 எம்.எல்.ஏக்களுடன் ஜெயலலிதா போயஸ் கார்டனில் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜெயலலிதா பிரதான எதிர்க்கட்சித் தலைவர். நான் துணைத் தலைவர். 26 எம்.எல்.ஏக்கள் அப்போது இருந்தோம். பின்னர் இடைத்தேர்தல்களில் ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்கள் கூடியிருக்கலாம். அந்த கூட்டத்தில் கருணாநிதி, பட்ஜெட்டை படிக்க விடாமல் டிஸ்டர்ப் செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. 
 

கருணாநிதி பட்ஜெட்டை படிக்கவிடாமல் ஏன் தடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு முன்னதாக, சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில் ஜெயலலிதா, தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸ் பறிமுதல் செய்திருந்தது. அப்போது பெரிய பிரச்சனையாக அது இருந்தது. போலீஸை துஷ்பிரயோகம் செய்றீங்கன்னு ஒரு காரணத்தை சொல்லி குழப்பம் பண்ணனும், தடுக்கனும்னு சொல்லி ஜெயலலிதா சொன்னதால முடிவெடுத்தோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram