பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், மூன்று மாதங்களாக நடந்துகொண்டிருக்கும் மணிப்பூர் வன்முறை விவகாரம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்திவந்த எதிர்க்கட்சிகள், பா.ஜ.க அரசு ஒத்துழைக்காததால் அரசுமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீதான விவாதம் நேற்று தொடங்கி இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது. 

இருப்பினும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அதன் பிறகு இன்றுவரை நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. இன்றைய விவாதத்தில் முதல் ஆளாக உரையாற்றிய ராகுல் காந்தி, “பிரதமர் ஏன் இன்னும் மணிப்பூருக்குச் செல்லவில்லை. பிரதமரைப் பொறுத்தவரை, அவருக்கு மணிப்பூர் இந்தியாவில் இல்லை. மணிப்பூரில் பாரத மாதாவை எரித்துவிட்டீர்கள் நீங்கள் (பா.ஜ.க). நீங்கள் தேச துரோகிகள்” என்று கடுமையாகச் சாடினார். 

இந்த நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீதான விவாதத்தில் மணிப்பூர் வன்முறைப் பற்றி உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் இதுபோன்ற சம்பவங்களில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது வெட்கக்கேடானது. இந்த வன்முறையில் 152 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்தது துரதிஷ்டவசமானது. ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஏற்பட்ட அவமானம் இது. 

ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்த வீடியோ வெளியானது ஏன்… அந்த வீடியோ யாரிடமாவது இருந்திருந்தால், அதனை அப்போதே டி.ஜி.பி-யிடம் கொடுத்திருக்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்டிருந்தால் சம்பவம் நடந்த அன்றே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். இப்போது ஒன்பது பேரை நாங்கள் அடையாளம் கண்டு கைதுசெய்திருக்கிறோம். மேலும், மணிப்பூரில் மூன்று நாள்கள் நான் இருந்தேன். அந்தச் சமயத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் முதல் நாளிலிருந்தே விவாதத்துக்கு நான் தயாராக இருந்தேன். ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதத்தை விரும்பவில்லை. நான் பேசுவதைக்கூட அவர்கள் விரும்பவில்லை. இருப்பினும் அவர்கள் என்னை வாயடைக்க முடியாது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram