விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளம் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன் தங்கப் பட்டை உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
தற்போது கருப்பு நிற சுடுமண் தோசைக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான இந்த சுடுமண் தோசைக்கல் சேதமடைந்த நிலையில் உள்ளது தொடர்ந்து உணவு தயாரிக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டு வருவதால் தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்திருக்கலாமென தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர் தற்போது வரை இங்கு 2800 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த தோசை கல்லை குறித்து நெட்டிசன்கள் இப்ப மட்டும் இல்ல ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்பும் தோசை தான் கிங்கு என்று நக்கலடித்து வருகின்றனர்.