இந்தியாவின் பல மாநிலங்களின் தக்காளி விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே தக்காளி பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது என்பது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது, மத்தியப் பிரதேசம் ஷாதோல் மாவட்டத்தின் டிபன்ஸ் சர்வீஸ் சென்டர் நடத்திவரும் சஞ்சீவ் பர்மன் சில நாட்களுக்கு முன்பு சமைக்கும் போது தன் மனைவி ஆர்த்தியிடம் தெரிவிக்காமல் இரண்டு தக்காளியை கூடுதலாக சேர்த்து சமைத்து விட்டாராம்.
இதனால் அவரின் மனைவி, “என்னிடம் எதுவும் கேட்காமல் ஏன் தக்காளி அதிகமாக சேர்த்து சமைத்தீர்கள்” என்று கணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு தன் சகோதரி வீட்டிற்கு போய்விட்டார் இது குறித்து போலீஸிலும் புகார் தெரிவித்துள்ளார் போலீசார் இவரின் போனில் பேச வைத்து சமரசம்செய்து அனுப்பிவைத்துள்ளனர்
தக்காளின் விலைவாசி உயர்வினால் நாடுமுழுவதும் மக்கள் அல்லல்படும் இந்த நேரத்தில், இந்த மாதிரியான சம்பவங்களும் அங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மக்களிடையே ஆச்சரியத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.