உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகளில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பிரதமர் மோடி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஜி20 மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய அவர், ‘‘சிறந்த எதிர்காலத்தை நோக்கி உலகத்தை அழைத்துச் செல்ல, உலக அமைப்புகள் தற்போதைய யதார்த்தங்களுக்கு ஏற்ப இருப்பது அவசியம். இன்று, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஐ.நா. நிறுவப்பட்டபோது, 51 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தன.
இன்று, 200க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினராகி உள்ளன. இருப்பினும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது. (அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன). உலகம் அதன் பிறகு ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மாறிவிட்டது. போக்குவரத்து, தகவல் தொடர்பு, சுகாதாரம் மற்றும் கல்வி என, ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. இந்த புதிய யதார்த்தங்கள் உலகளாவிய அமைப்புகளிலும் பிரதிபலிக்க வேண்டும். காலத்துக்கு ஏற்ப மாறாதவர்கள் தங்கள் பொருத்தத்தை இழந்துவிடுவார்கள் என்பது இயற்கையின் நியதி’’ என கூறினார்.