தமிழ்நாடு

சேலத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் டூவீலர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வாலிபர் அங்கிருந்த போலீசாரிடம் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியது...
பொதுவாகவே இளசுங்களை தன் பக்கம் இழுத்து அவர்கள் மத்தியில் பேசுபொருளாக இருப்பவர் வெங்கட்பிரபு.. ஸ்டார்  ஹோட்டல் சப்ளையர் மாதிரி யார், யாருக்கு என்ன வேணுமோ அதை அன்லிமிடெட்.ஆக பரிமாறுவதில் பி.ஹெச்.டி… வாங்கியவர் வெங்கட். தனது முதல் படமான *சென்னை 600028*.இல் அதுவரை கிரிக்கெட்.டை பற்றி யாரும் சொல்லாத கோணத்தில் காதல், நட்பு என இளநெஞ்சங்களை கட்டிப்போட்டு இருந்தார். அடுத்து தல அஜித்தின் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர் போல *மங்காத்தா*.வில் பொளந்து கட்டினார். நெகடிவ் ரோலில் வாலி. க்கு பிறகு அழுத்தமான ரோலில் அஜித்தை பட்டய கிளப்ப வைத்தார். ஆம்பூர் *பிரியாணி* யை *சரோஜா* கையால் *கோவா* வில் சாப்பிட்டு விட்டு *மன்மதலீலை* யை தொடங்குவது போல பல நேர்த்தியான படங்களை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படமாக்கி இருந்தார். சிம்புவுக்கு சினிமா மார்க்கெட் தொலைந்து போன சமயத்தில் *மாநாடு* போட்டு அவரை மீண்டும் வெற்றி சிம்மாசனத்தில் அமர வைத்தார்.. சின்ன குழந்தை முதல் இப்ப வரை கையை ஆட்டி,  காலை தூக்கி பல இம்சைகள் செய்தாலும் பெரிய வெற்றியை சுவைக்காமல் இருந்த சிம்பு வெங்கட் பிரபு.வால் மீண்டும் கல்லா கட்ட துவங்கி உள்ளார். காப்பாத்துமா கஸ்டடி தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.வை மே மாதம் 12 ஆம் தேதி  *கஷ்டடி* யில் எடுத்து மீண்டும் களமாட காத்து இருக்கிறார் வெங்கட். தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் கொடி நாட்டிய ஆள் தற்போது *கார தேசமான ஆந்திர பிரதேசத்தில்* காலடி எடுத்து வைக்க இருக்கிறார். ஆனால் இந்த படத்தில் ஒரு திருஷ்டி பூசணிக்காய் ஒன்று   உள்ளது. அது இவரின் ராசிக்கு வெற்றியை தேடி தரும். அந்த திருஷ்டி வேறொன்றுமில்லை பிரேம்ஜி தான்.
 தமிழகத்தில் குறைந்த செலவில் மருத்துவ சேவைகள் அனைவரையும் சென்றடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் | ஸ்டாலின் இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. வாழ்க்கைக்கான போட்டியில் வெற்றி பெற கடுமையாக உழைப்பில் காட்டும் கவனம் உணவு பழக்க வழக்கங்களில் கடைப்பிடிப்பதில்லை.இத்தகைய சூழலில் ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் தமிழக அரசு மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். 2023,24 ஆம் ஆண்டுக்கான,மானிய கோரிக்கையில் மருத்துவத்திற்கு என பல்வேறு திட்டங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொண்டு வந்தார்.மருத்துவ துறையில் ஆர்வமுடன் துணை செய்ய திகழும் தனியார் மற்றும் தொழில் முனைவோரு்டன் இணைந்து இந்த திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.இந்த மாநாடு உடல் நலம் பேணும் பொதுமக்களை ஒருங்கிணைக்கும் வகையில்  கண்காட்சி, கருத்தரங்கம், கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் கொண்டு செய்ய முக்கிய காரணியாக விளங்கும். குறைந்த செலவில் மருத்துவ சேவைகள்  தமிழகத்தில் குறைந்த செலவில் மருத்துவ சேவைகள் அனைவரையும் சென்றடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும்திறமையான சுகாதார  நிபுணர்கள், சிறந்த மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் நியாய விலையில் மருந்துகள் அளிப்பதன் மூலம் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார். தமிழக சுற்றுலா துறையும் இணைப்பு இந்த திட்டத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்லும் வகையில் தமிழக சுற்றுலா துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையும்  இணைந்து செயல்பட உள்ளது.  தமிழகத்தை மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக மாற்றும் முயற்சியில் சுணக்கம் இல்லாமல் செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்..  பிற நாடுகளின் பிரதிநிதிகள் வருகை  இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ், ஓமன், நேபாளம், சவுதி அரேபியா, மியன்மார், ஶ்ரீலங்கா, மொரீசியஸ், வியட்நாம் மற்றும் அரேபிய நாடுகளை சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மேலும் தமிழ்நாட்டில் உள்ள 120 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள், பிரபல மருத்துவர்கள், பிற நாட்டின் தூதுவர்கள், சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலியான விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கே உடனடியாக விரைகிறார். ஜிப்மரில் சிகிச்சை கள்ளசாராயம் குடித்ததில் இதுவரை 9 பேர் பலியான நிலையில் மேலும் பலரும் புதுச்சேரி. யில் உள்ள ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏறக்குறைய 16 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிலரின் உடல்நிலையும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram