செய்திகள்

டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னரை விட மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அதிகாரம் என நேற்று உச்சநீதி...
வந்தே பாரத் ரயில் சேவை என்பது இந்திய நகரங்களுக்கு இடையே உள்ள அதிகமான  இடைவெளியை குறைத்து அதிவேகமாக செல்லக்கூடிய பணி...
இந்த நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் வங்கி கணக்கு வைத்து, அதனை முறையாக பராமரிக்கிறீர்கள். தொலைவில் இருப்பவர்களுக்கு பணத்தை அனுப்பவும்,...
இன்று இந்தியாவில் டாக் ஆப் தி ஹீரோ.வாக பார்க்கப்படுபவர் 61 வயது நிரம்பிய கீரவாணி. இவரின் முந்தைய பெயர் மரகதமணி. ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது தெலுங்கு சினிமாவிற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கே பெருமை தரக்கூடிய விஷயமாகவே கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக முதன் முதலில் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மானாக இருந்தார். அதன் பிறகு அதே துறையில் இப்பொழுது மீண்டும் ஒரு ஆஸ்கார் என நினைக்கும் போது இந்திய சினிமாவே மார்தட்டிக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. அந்த விருதுக்கு சொந்தக்காரராக இருப்பவர் கீரவாணி. இசைக்கு மட்டுமில்லாமல் அந்த பாடலை எழுதிய பாடலாசிரியரான சந்திரபோஸுக்கும் அந்த விருது கிடைத்துள்ளது. பொதுவாகவே இசையமைப்பாளர் என்றால் ஒரு வித ஸ்ட்டெலாக இருப்பார்கள் என்று தான் ஒரு பிம்பம் இருக்கின்றது. உதாரணமாக அனிருத், தேவி ஸ்ரீபிரசாத், தமன், போன்றவர்கள் பார்ப்பதற்கே அந்த துறு துறு போக்கில் எப்போதுமே இருப்பார்கள். ஆனால் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசையமைப்பாளரான கீரவாணியை பார்க்கும் போது இவரும் இசையமைப்பாளரா? என்று கேட்க கூடிய அளவிற்கு மிகவும் சாதுவாக குறிப்பாக சொல்லப்போனால் வாழ்க்கையில் பல அடிகளை பட்ட ஒரு இயக்குனர் மாதிரி இருப்பார். ஆனால் அவர் தான் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய டிரெண்டிங்கான நபராக வலம் வருகிறார். 90களில் வெளிவந்த கொண்டாட்டம், பிரதாப் போன்ற அர்ஜூன் படங்களுக்கு இவர் தான் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நண்பர்கள் கொண்டாடிய ‘வானமே எல்லை’ படத்திற்கும் கீரவாணி என்கிற மரகதமணி தான் இசையமைத்திருக்கிறார். வானமே எல்லை படத்தின் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்.  இன்று அனைவரின் கனவாக இருக்கும் ஆஸ்கர் விருதை் வென்று முதிய வயதிலும் சாதித்துள்ளார்.
 தமிழகத்தில் குறைந்த செலவில் மருத்துவ சேவைகள் அனைவரையும் சென்றடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் | ஸ்டாலின் இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. வாழ்க்கைக்கான போட்டியில் வெற்றி பெற கடுமையாக உழைப்பில் காட்டும் கவனம் உணவு பழக்க வழக்கங்களில் கடைப்பிடிப்பதில்லை.இத்தகைய சூழலில் ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் தமிழக அரசு மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். 2023,24 ஆம் ஆண்டுக்கான,மானிய கோரிக்கையில் மருத்துவத்திற்கு என பல்வேறு திட்டங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொண்டு வந்தார்.மருத்துவ துறையில் ஆர்வமுடன் துணை செய்ய திகழும் தனியார் மற்றும் தொழில் முனைவோரு்டன் இணைந்து இந்த திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.இந்த மாநாடு உடல் நலம் பேணும் பொதுமக்களை ஒருங்கிணைக்கும் வகையில்  கண்காட்சி, கருத்தரங்கம், கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் கொண்டு செய்ய முக்கிய காரணியாக விளங்கும். குறைந்த செலவில் மருத்துவ சேவைகள்  தமிழகத்தில் குறைந்த செலவில் மருத்துவ சேவைகள் அனைவரையும் சென்றடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும்திறமையான சுகாதார  நிபுணர்கள், சிறந்த மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் நியாய விலையில் மருந்துகள் அளிப்பதன் மூலம் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார். தமிழக சுற்றுலா துறையும் இணைப்பு இந்த திட்டத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்லும் வகையில் தமிழக சுற்றுலா துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையும்  இணைந்து செயல்பட உள்ளது.  தமிழகத்தை மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக மாற்றும் முயற்சியில் சுணக்கம் இல்லாமல் செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்..  பிற நாடுகளின் பிரதிநிதிகள் வருகை  இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ், ஓமன், நேபாளம், சவுதி அரேபியா, மியன்மார், ஶ்ரீலங்கா, மொரீசியஸ், வியட்நாம் மற்றும் அரேபிய நாடுகளை சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மேலும் தமிழ்நாட்டில் உள்ள 120 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள், பிரபல மருத்துவர்கள், பிற நாட்டின் தூதுவர்கள், சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலியான விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கே உடனடியாக விரைகிறார். ஜிப்மரில் சிகிச்சை கள்ளசாராயம் குடித்ததில் இதுவரை 9 பேர் பலியான நிலையில் மேலும் பலரும் புதுச்சேரி. யில் உள்ள ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏறக்குறைய 16 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிலரின் உடல்நிலையும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒருவழியாக கர்நாடக மாநில முதல்வர் பதவியை சித்தராமையா கைப்பற்றினார். கர்நாடகா.வில் திடீர் திருப்பம்: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போது தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிஜேபி யிடம் இருந்து கைப்பற்றியது. ஆனாலும் அக்கட்சியின் முதல்வர் யார் என்ற கேள்வி தொண்டர்களிடையே ஏற்பட்டது. அதற்காக அக்கட்சியின் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் டெல்லிக்கு காவடி தூக்கி சென்றனர். எம்.எல். ஏ.க்களிடயே மோதல் சித்தராமையா தரப்பு மற்றும் சிவக்குமார் தரப்பு என இரண்டு பிரிவாக பிரிந்து எம்.எல். ஏ.க்களிடையே மோதல் உருவானது. நிலைமை கை மீறி போவதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி மேலிடம் இருவரையும் பேச்சுவார்த்தைக்கு  அழைத்தது. அதிலும் இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் ஆகவில்லை. பின்பு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இருவரையும் ஒத்துபோகும் படி கூறியதால் பிரச்சினை இன்று முடிவுக்கு வந்துள்ளது. சித்தராமையா முதல்வர் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முன்னாள் முதல்வர் சித்தராமையா முதல்வராக  காங்கிரஸ் கட்சியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். துணை முதல்வராக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை மறுநாள் பதவியேற்பு விழா பெங்களூரு  கண்டிவாரா மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்த கருத்துகளை உடைய கட்சிகளை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இருவரிடமும் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்பதற்காகவே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறினார்.
error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram