சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் வெளியானது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி அரை 302...
ஹீரோ
பொதுவாகவே இளசுங்களை தன் பக்கம் இழுத்து அவர்கள் மத்தியில் பேசுபொருளாக இருப்பவர் வெங்கட்பிரபு.. ஸ்டார் ஹோட்டல் சப்ளையர் மாதிரி யார், யாருக்கு என்ன வேணுமோ அதை அன்லிமிடெட்.ஆக பரிமாறுவதில் பி.ஹெச்.டி… வாங்கியவர் வெங்கட். தனது முதல் படமான *சென்னை 600028*.இல் அதுவரை கிரிக்கெட்.டை பற்றி யாரும் சொல்லாத கோணத்தில் காதல், நட்பு என இளநெஞ்சங்களை கட்டிப்போட்டு இருந்தார். அடுத்து தல அஜித்தின் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர் போல *மங்காத்தா*.வில் பொளந்து கட்டினார். நெகடிவ் ரோலில் வாலி. க்கு பிறகு அழுத்தமான ரோலில் அஜித்தை பட்டய கிளப்ப வைத்தார். ஆம்பூர் *பிரியாணி* யை *சரோஜா* கையால் *கோவா* வில் சாப்பிட்டு விட்டு *மன்மதலீலை* யை தொடங்குவது போல பல நேர்த்தியான படங்களை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படமாக்கி இருந்தார். சிம்புவுக்கு சினிமா மார்க்கெட் தொலைந்து போன சமயத்தில் *மாநாடு* போட்டு அவரை மீண்டும் வெற்றி சிம்மாசனத்தில் அமர வைத்தார்.. சின்ன குழந்தை முதல் இப்ப வரை கையை ஆட்டி, காலை தூக்கி பல இம்சைகள் செய்தாலும் பெரிய வெற்றியை சுவைக்காமல் இருந்த சிம்பு வெங்கட் பிரபு.வால் மீண்டும் கல்லா கட்ட துவங்கி உள்ளார். காப்பாத்துமா கஸ்டடி தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.வை மே மாதம் 12 ஆம் தேதி *கஷ்டடி* யில் எடுத்து மீண்டும் களமாட காத்து இருக்கிறார் வெங்கட். தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் கொடி நாட்டிய ஆள் தற்போது *கார தேசமான ஆந்திர பிரதேசத்தில்* காலடி எடுத்து வைக்க இருக்கிறார். ஆனால் இந்த படத்தில் ஒரு திருஷ்டி பூசணிக்காய் ஒன்று உள்ளது. அது இவரின் ராசிக்கு வெற்றியை தேடி தரும். அந்த திருஷ்டி வேறொன்றுமில்லை பிரேம்ஜி தான்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இன்று வெளி வந்துள்ள ராவண கோட்டம் படம் பல பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. கருவேல மர பிரச்சினை கதையா சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் வந்த மதயானைக்கூட்டம் படத்திற்கு பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கிய படம் ராவண கோட்டம் . சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் விக்ரம் சுகுமாறனின் முதல் படமான மதயானைக் கூட்டம் சாதியை மறுத்தாலும், சில இடங்களில் சாதியைத் தூக்கிப் பிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இராவண கோட்டம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின், அதேபோன்ற விமர்சனங்கள் இந்தப் படத்துக்கும் எழுப்பப்பட்டன. இந்த படத்தை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் வாழும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்த மக்கள் பழகி வருகின்றனர். இந்த இரண்டு ஜாதியை சேர்ந்தவர்களை நடிகர் பிரபு. வும், இளவரசு. வும் நட்பு பாராட்டுகின்றனர். இந்நிலையில் அந்த இரண்டு கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் உருவாகிறது. இதை தீர்க்க வரும் பிரபு. வும், இளவரசுவும் கொல்லப்படுகின்றனர். அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை. இதில் என்ன ஜாதி பிரச்சினை இதில் சாந்தனு. வும், கயல் ஆனந்தியும் காதலர்களாக வருகின்றனர். 1957 ஆம் ஆண்டு நடந்த முதுகுளத்தூர் கலவரத்தின் பின்னணியில், சாதீய பிரச்சினை, முக்கோணக் காதல் கதை மற்றும் சில கமர்ஷியல் அம்சங்களையும் கூட்டி கதை சொல்லியிருக்கிறார்கள். சாந்தனுவா இது? இதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்த பாக்யராஜ் மகன் சாந்தனு இந்த படத்தில் கரடு முரடான இளைஞன் பாத்திரத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளைக் காட்டிலும் ஆக்ரோஷமாக கபடி விளையாடுவது, பிரபுவுக்காக கதறி அழும் காட்சிகள், நண்பனிடம் பேச முடியாமல் வருந்தும் காட்சிகளில் சாந்தனு மிளிர்கிறார். இரு சமூகத்து தலைவர்களாகவும் நண்பர்களாகவும் வலம் வரும் நடிகர் பிரபுவும் இளவரசுவும் தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கின்றனர். சாந்தனுவின் நண்பராக மதிமாறனாக நடித்துள்ள சஞ்சீவ் சரவணனுக்கு கனமான பாத்திரம். தன் நண்பன் சாந்தனுவின் காதலி ஆனந்தியுடன் சூழ்ச்சியால் காதலில் விழும் இடங்களில் பரிதாபத்துக்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறார். இன்னும் கொஞ்சம் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கலாம். ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்குத் தேவையானதை செய்கின்றன....