சினிமா

இன்று இந்தியாவில் டாக் ஆப் தி ஹீரோ.வாக பார்க்கப்படுபவர் 61 வயது நிரம்பிய கீரவாணி. இவரின் முந்தைய பெயர் மரகதமணி. ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது தெலுங்கு சினிமாவிற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கே பெருமை தரக்கூடிய விஷயமாகவே கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக முதன் முதலில் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மானாக இருந்தார். அதன் பிறகு அதே துறையில் இப்பொழுது மீண்டும் ஒரு ஆஸ்கார் என நினைக்கும் போது இந்திய சினிமாவே மார்தட்டிக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. அந்த விருதுக்கு சொந்தக்காரராக இருப்பவர் கீரவாணி. இசைக்கு மட்டுமில்லாமல் அந்த பாடலை எழுதிய பாடலாசிரியரான சந்திரபோஸுக்கும் அந்த விருது கிடைத்துள்ளது. பொதுவாகவே இசையமைப்பாளர் என்றால் ஒரு வித ஸ்ட்டெலாக இருப்பார்கள் என்று தான் ஒரு பிம்பம் இருக்கின்றது. உதாரணமாக அனிருத், தேவி ஸ்ரீபிரசாத், தமன், போன்றவர்கள் பார்ப்பதற்கே அந்த துறு துறு போக்கில் எப்போதுமே இருப்பார்கள். ஆனால் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசையமைப்பாளரான கீரவாணியை பார்க்கும் போது இவரும் இசையமைப்பாளரா? என்று கேட்க கூடிய அளவிற்கு மிகவும் சாதுவாக குறிப்பாக சொல்லப்போனால் வாழ்க்கையில் பல அடிகளை பட்ட ஒரு இயக்குனர் மாதிரி இருப்பார். ஆனால் அவர் தான் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய டிரெண்டிங்கான நபராக வலம் வருகிறார். 90களில் வெளிவந்த கொண்டாட்டம், பிரதாப் போன்ற அர்ஜூன் படங்களுக்கு இவர் தான் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நண்பர்கள் கொண்டாடிய ‘வானமே எல்லை’ படத்திற்கும் கீரவாணி என்கிற மரகதமணி தான் இசையமைத்திருக்கிறார். வானமே எல்லை படத்தின் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்.  இன்று அனைவரின் கனவாக இருக்கும் ஆஸ்கர் விருதை் வென்று முதிய வயதிலும் சாதித்துள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை முஸ்லீம்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட படங்கள் வருவது மிகவும் அபூர்வம். இந்து மற்றும் கிறிஸ்தவ நட்பு, குடும்பங்கள் குறித்த படங்கள் அதிகமாக வந்துள்ளன. முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், தான் பட்ட கஷ்டம் தன் குழந்தைகள் பட கூடாது என்பதற்காக வேலைக்கு செல்கிறாள். அங்கு அவள் சந்திக்கும் பிரச்சினைகள், சிக்கல்கள் என்ன என்பதையும் அதிலிருந்து அவள் மீண்டாளா என்பதையும் அழகான திரைக்கதை மூலம் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறியிருக்கிறார். அப்படி என்ன தான் கதை? சென்னை திருவல்லிக்கேணியில் கணவர் ஜித்தன் ரமேஷ்,  மூன்று குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சூழ கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்கிறார். அது ஒரு கால் சென்டர். கூடுதல் சம்பளம், இன்க்ரிமென்ட் கிடைக்கும் என்பதற்காக பிரண்ட் ஷிப் சாட் என்ற பிரிவுக்குச் செல்கிறார். அங்கு வரும்  டெலிபோன் கால் கள் அனைத்துமே ஆபாசமானவைதான். தங்கள் அடையாளத்தைச் சொல்லாமல் பணி செய்பவர்கள் வரும் போன்கால்களில் பேசவேண்டும். இப்படியெல்லாம் கூட  கால் சென்டர்  இருக்கிறதா?. ஒரு வாரம் அதில் வேலை பார்க்கலாம் இல்லையென்றால் மாறிக்கொள்ளலாம் என நினைத்து செல்கிறார். அப்படி வரும் ஒரு காலில் ஒருவரிடம் பேசி வருகிறார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் யார் என்பதை தெரிந்து கொண்டு, அந்த நபர் ஐஸ்வர்யா ராஜேஷை மிரட்ட ஆரம்பிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை. எந்த மதப் பெண்களாக இருந்தாலும் பல பெண்கள் அவர்களது விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாத ஒரு கட்டமைப்புதான் நம்மிடம் உள்ளது. தங்கள் கனவுகளை, ஆசைகளை, லட்சியங்களைத் துறந்து ஏதோ ஒரு சூழலில் அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தள்ளப்படுகிறார்கள். அப்படியான ஒரு கதாபாத்திரமாகத்தான்  பர்ஹானா கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்படிப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சினைகளைச் சமாளிக்க வேலைக்கு வந்தால் அங்கு சில விஷமிகளால் எவ்வளவு தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை இப்படம் பதிவு செய்துள்ளது. நெகடிவ் கருத்தும், சில நெருடல்களும் சென்னையை பொறுத்தவரை பலதரப்பட்ட வேலைகள் இருக்கும்போது ஒரு குடும்பப்பெண் இவ்வாறு கால் செண்டரில் ஆபாசமாக பேசும் ஒரு  பணிக்கு செல்வாளா என்பதே சின்ன நெருடல். அதுவே இந்த கதாபாத்திரத்தின் மேல் ஒரு பரிதாபம் வருவதற்கு பதிலாக முரண்பாடு தான் தோன்றுகிறது. இதுவரை நடித்திராத, மனைவிக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். மிகவும் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஐஸ்வர்யாவின் தோழிகளாக அனுமோள் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் பெண்கள் தடம் மாறினால் எப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதை ஐஸ்வர்யா தத்தா கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இன்று வெளி வந்துள்ள ராவண கோட்டம் படம் பல பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. கருவேல மர பிரச்சினை கதையா சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் வந்த மதயானைக்கூட்டம் படத்திற்கு பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கிய படம் ராவண கோட்டம் . சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் விக்ரம் சுகுமாறனின் முதல் படமான மதயானைக் கூட்டம் சாதியை மறுத்தாலும், சில இடங்களில் சாதியைத் தூக்கிப் பிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில்,  இராவண கோட்டம்  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின், அதேபோன்ற விமர்சனங்கள் இந்தப் படத்துக்கும்  எழுப்பப்பட்டன. இந்த படத்தை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் வாழும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்த மக்கள் பழகி வருகின்றனர். இந்த இரண்டு ஜாதியை சேர்ந்தவர்களை நடிகர் பிரபு. வும், இளவரசு. வும் நட்பு பாராட்டுகின்றனர். இந்நிலையில் அந்த இரண்டு கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் உருவாகிறது. இதை தீர்க்க வரும் பிரபு. வும், இளவரசுவும் கொல்லப்படுகின்றனர். அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை. இதில் என்ன ஜாதி பிரச்சினை இதில் சாந்தனு. வும், கயல் ஆனந்தியும் காதலர்களாக வருகின்றனர். 1957 ஆம் ஆண்டு நடந்த  முதுகுளத்தூர் கலவரத்தின் பின்னணியில், சாதீய பிரச்சினை, முக்கோணக் காதல் கதை மற்றும் சில கமர்ஷியல் அம்சங்களையும் கூட்டி கதை சொல்லியிருக்கிறார்கள். சாந்தனுவா இது? இதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்த பாக்யராஜ் மகன் சாந்தனு இந்த படத்தில் கரடு முரடான இளைஞன் பாத்திரத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளைக் காட்டிலும் ஆக்ரோஷமாக கபடி விளையாடுவது, பிரபுவுக்காக கதறி அழும் காட்சிகள், நண்பனிடம் பேச முடியாமல் வருந்தும் காட்சிகளில் சாந்தனு மிளிர்கிறார். இரு சமூகத்து தலைவர்களாகவும் நண்பர்களாகவும் வலம் வரும் நடிகர் பிரபுவும் இளவரசுவும் தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கின்றனர். சாந்தனுவின் நண்பராக மதிமாறனாக நடித்துள்ள சஞ்சீவ் சரவணனுக்கு கனமான பாத்திரம். தன் நண்பன் சாந்தனுவின் காதலி ஆனந்தியுடன் சூழ்ச்சியால் காதலில் விழும் இடங்களில் பரிதாபத்துக்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறார். இன்னும் கொஞ்சம் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கலாம். ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்குத் தேவையானதை செய்கின்றன....
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது மிமிக்ரி மூலம் பிரபலம் அடைந்தவர் ரோபோ சங்கர். கேப்டன் விஜயகாந்த்...
error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram