
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது மிமிக்ரி மூலம் பிரபலம் அடைந்தவர் ரோபோ சங்கர். கேப்டன் விஜயகாந்த் போல ஆக்க்ஷன் செய்வதில் வல்லவர். இவரின் பலகுரல் திறமையை பார்த்து சினிமா வாய்ப்புகள் குவிந்தன. அஜித், தனுஷ், விமல், சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடனும் நடித்து புகழ் பெற்றவர். இவரின் மகள் கூட விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
மெலிந்த உடல்
ரோபோ சங்கர் என்றாலே அவரின் கனத்த உடல் தான் ஞாபகத்திற்க்கு வரும். அந்த அளவு அனைவரின் மனதிலும் தன் உருவத்தை பதிய வைத்து இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரின் மகள் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ரோபோ சங்கர் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருந்தார். அதை கண்ட அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் ஷாக் ஆகி விட்டனர். பலரும் அவரின் மெலிந்த உடலை பற்றி வதந்திகள் பரப்பி வந்தனர். அதன்பின்பு அவரின் குடும்பம் சார்பில் அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். அதில் சினிமாவில் நடிப்பதற்காக உடலை குறைத்து உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அவருக்கு கல்லீரல் பிரச்சினை இருப்பதால் உடல் இப்படி இருப்பதாக சினிமா துறையை சார்ந்த பலரும் தெரிவித்து வருகின்றனர்.
நடனமாடும் வீடியோ
இந்நிலையில் மதுரை முத்து ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் ரோபோ சங்கர் குத்துப்பாட்டுக்கு நடன அசைவுகள் போட்டு கலக்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.