
புதுடெல்லி: மக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதற்கான வாக்கெடுப்பில் 215 எம்பிக்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்த்து யாரும் வாக்களிக்க வில்லை. மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அதை தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் மக்களவையில் மசோதா மீது விவாதம் நடந்தது. 27 பெண் எம்பிக்கள் உள்பட 60 எம்பிக்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள். இறுதியில் நடந்த ஓட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 454 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்து பேசுகையில், ‘ கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பிரதமர் மோடி அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவை, மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்கும் கிடைக்கும். இந்த இடஒதுக்கீடு எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளுக்கும் பொருந்தும். எந்தெந்த இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் தீர்மானிக்கும்’ என்று பேசினார்.
அதை தொடர்ந்து மசோதா மீதான விவாதத்தை பா.ஜ தேசிய தலைவர் ஜே.பி நட்டா தொடங்கி வைத்தார்.
நேற்று முன்தினம் மக்களவையில் ராகுல்காந்தி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. நட்டா பேசும்போது,’ பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஆதரிக்க வேண்டும். நாட்டை ஆளும் போது ஓபிசிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை. 1992ல் உச்ச நீதிமன்றம் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்கும் கிடைக்கும். இந்த இடஒதுக்கீடு எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளுக்கும் பொருந்தும். எந்தெந்த இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் தீர்மானிக்கும்’ என்று பேசினார்.